ONGC RECRUITMENT 2019 |
ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : அசிஸ்டன்ட் டெக்னீசியன் |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 737 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.
இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 908 வேலைவாய்ப்புகள்
டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 908 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது ஏராளமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலம் மேற்கு மண்டல ஓ.என்.ஜி.சி. கிளையில் 737 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதேபோல சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு மண்டல கிளையில் அசிஸ்டன்ட் டெக்னீசியன், ஜூனியர் பயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 86 பேரும், திரிபுரா கிளையில் நான்-எக்சிகியூட்டிவ் பணிக்கு 85 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மேற்குமண்டல கிளை பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
ஏ1, ஏ2 லெவல் மற்றும் டபுள்யு 1 லெவல் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அசிஸ்டன்ட் டெக்னீசியன், அசிஸ்டன்ட் (டிரான்ஸ்போர்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட்) செக்யூரிட்டி சூப்பிரவைசர், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், கிரேன் ஆபரேட்டர், ரிகர் போன்ற பணிகள் உள்ளன. மொத்தம் 737 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சிவில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், பெட்ரோலியம் என்ஜினீயரிங், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலை அறிவியல், கலை பட்டப் படிப்பு படித்தவர்கள், கணினி அறிவு, தட்டச்சுத்திறன் பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பிரிவில் பணித்திறன் பெற்றவர் களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.370 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு வருகிற மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை https://www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தெற்கு மண்டலம்
தெற்கு மண்டல கிளையில் 86 பணியிடங்கள் உள்ளன. இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், 10-ம் வகுப்பு படிப்புக்குப்பின் குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிட விவரம், வயது வரம்பு, கல்வித்தகுதி விவரங்களை என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு வருகிற 20-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இதுபோல திரிபுரா மாநிலம் அகர்தாலா ஓ.என்.ஜி.சி. கிளையில் நான்-எக்சிகியூட்டிவ் பணிக்கு 85 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு 19-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Home »
ONGC JOB
» ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டெக்னீசியன் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 737 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.02.2019.
No comments:
Post a Comment