-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
BOM RECRUITMENT 2019 | மகாராஷ்டிரா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- BOM RECRUITMENT 2019 | மகாராஷ்டிரா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : கிரேடு 2, கிரேடு 3 தரத்திலான அதிகாரி உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 0350 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2020.
- இணைய முகவரி : https://www.bankofmaharashtra.in/
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01-04-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஸ்கேல் 3 தரத்திலான பணிகளுக்கு 38 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், ரூ.1180 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள், டிசம்பர் 31-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, டிசம்பர் 31-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இவை பற்றிய விவரங்களை https://www.bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 50 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.01.2020.
- இணைய முகவரி : www.becil.com
விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் ஜனவரி 7-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.becil.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி .
- SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : பயிற்சிப் பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 230 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2020.
- இணைய முகவரி : www.sjvn.nic.in
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை www.sjvn.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
VSSC RECRUITMENT 2019 | VSSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- VSSC RECRUITMENT 2019 | VSSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : சயின்டிஸ்ட்/என்ஜினீயர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.01.2020.
- இணைய முகவரி : https://www.vssc.gov.in
எம்.இ., எம்.டெக் படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சியாளர்/என்ஜினீயர் பணிக்கும், முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு ஜனவரி 3-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.
மற்றொரு அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், லைபிரரி அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு 63 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, ஜனவரி 1-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இன்னொரு அறிவிப்பின்படி டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களுக்கு 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதுபற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு டிசம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இவை பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்ள https://www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
SPMCIL RECRUITMENT 2019 | SPMCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- SPMCIL RECRUITMENT 2019 | SPMCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஜூனியர் டெக்னீசியன், சூப்பிரவைசர், டெக்னீசியன் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 30 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.01.2020.
- இணைய முகவரி : www.job.kalvisolai.com
விருப்பமுள்ளவர்கள், முழுமையான விவரங்களை http://igmmumbai.spmcil.com/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, ஜனவரி 3-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
METRO RECRUITMENT 2019 | METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஸ்டேசன் கண்ட்ரோலர், ஜூனியர் என்ஜினீயர்உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.01.2020.
- METRO RECRUITMENT 2019 | METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஸ்டேசன் கண்ட்ரோலர், ஜூனியர் என்ஜினீயர்உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.01.2020.
- இணைய முகவரி : http://transport.rajasthan.gov.in/jmrc
அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். ரூ.500 கட்டணமாக செலுத்தி, இணையதள விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜனவரி 23-ந் தேதியாகும். http://transport.rajasthan.gov.in/jmrc என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
DRDO RECRUITMENT 2020 | ராணுவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-1-2020.
- DRDO RECRUITMENT 2020 | ராணுவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-1-2020.
- இணைய முகவரி : www.drdo.gov.in
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்துறையின் கீழ் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த அமைப்பு செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் குறிப்பிட்ட பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.
தற்போது ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணிகளுக்கான செப்டம் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1817 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 849 இடங்களும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 188 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 503 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 163 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 114 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 23-1-2020-ந் தேதியில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யும் முறை:
கணினித் தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இன்று (23-ந்தேதி) விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 23-1-2020-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
NPCIL RECRUITMENT 2020 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.01.2020.
- NPCIL RECRUITMENT 2020 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : டெக்னீசியன் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 137 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.01.2020.
- இணைய முகவரி : https://npcilcareers.co.in/
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 6-ந்தேதியாகும். கூடுதல் விவரங்களை https://npcilcareers.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
COAL INDIA RECRUITMENT 2019 | COAL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.1.2020.
- COAL INDIA RECRUITMENT 2019 | COAL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.1.2020.
- இணைய முகவரி : https://www.coalindia.in/
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ‘கோல் இந்தியா’. நிலக்கரி நிறுவனமான இதில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மைனிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கோல் பிரிபரேசன், சிஸ்டம்ஸ், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், பினான்ஸ், பெர்சனல், மார்க்கெட்டிங், கம்யூனிட்டி டெவலப்மென்ட் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 1326 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி தெரிந்து கொள்வோம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-4-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பி.இ., பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அனேக பிரிவில் பணியிடங்கள் உள்ளன. சி.ஏ, ஐ.சி.டபுள்யு.ஏ., எம்பி.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்புடன் குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு நிதி, பெர்சனல், மார்க்கெட்டிங், எச்.ஆர். போன்ற பிரிவு பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
தேர்வு செய்யும் முறை
கணினி வழி ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், வருகிற ஜனவரி 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி 27, 28-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.coalindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
DAAC RECRUITMENT 2019 | DAAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஏர்மேன் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
- DAAC RECRUITMENT 2019 | DAAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஏர்மேன் வேலை
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘ஏர்மேன்’ (குரூப்-எக்ஸ்) டெக்னிக்கல், ‘குரூப் ஒய்’ (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
கல்வித் தகுதி:
குரூப் எக்ஸ், விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 (10+2 முறையில்)/ இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பிரிவில் சேர விரும்புபவர்கள் பிளஸ்-2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்2/ இன்டர்மீடியட் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 17-1-2000 மற்றும் 30-12-2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உடற்தகுதி:
குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடையளவு குறைந்தபட்சம் 55 கிலோ இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன், கேட்கும் திறன், பற்கள் மற்றும் உடல் நலம் போன்றவை தேவையான அளவுக்குள் இருக்கிறதா? என சோதித்து அறியப்படும். அந்தந்த பணிக்கான சரியான உடற்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். ஆரம்பத்தில் இது 20 ஆண்டு கால பணி வாய்ப்பாகும். பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரை பணி நீடிப்பு செய்ய முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 2-1-2020 முதல் 20-1-2020-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விரிவான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
ஜனவரி முதல் மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் 82 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இவற்றில் 34,027 மாண வர்கள் படிக்கின்றனர். இதற் கிடையே திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்தது.
அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் டிவிஎஸ், எஸ்பிஐ வங்கி உட்பட 40 முன்னணி நிறுவனங்கள் பங் கேற்றன. 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மண்டலவாரியாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கூறிய தாவது:
திறந்தநிலை பல்கலைக்கழ கத்தில் வழங்கப்படும் 82 முதுநிலை, இளநிலை பாடப்பிரிவுகளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதி யானவைகள்தான். தேசிய அளவில் தமிழகம்தான் அதிக அளவிலான தொலைநிலை, திறந்தநிலை படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) அனுமதி பெற்றுள்ளது. அதனால்தான் நடப்பு கல்வி ஆண்டில் 16,873 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
பல்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னை, மதுரை, திருச்சி உட்பட 7 மண் டல மையங்களில் ஜனவரி முதல் பல்வேறு முன்னணி நிறுவனங் களைக் கொண்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பல்கலைக் கழக இணையதளத்தில் (http://www.tnou.ac.in) முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
அதேநேரம் பிற பல்கலைக்கழ கங்களில் படித்த மாணவர்களும் முன்பதிவு செய்து முகாமில் பங் கேற்கலாம். ஆனால், திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த முகாம்கள் வழியாக 3 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதுதவிர தற்போது படித்துவரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து ‘கூட்டிணைவு மையம்’ அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போட்டித்தேர்வு மூலம் 32 மாவட்ட நீதிபதிகள் விரைவில் நேரடியாக தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க உயர் நீதிமன்றம் அறிவிப்பு
மாவட்ட நீதிபதி பதவியில் 32 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத்தேர்வு மார்ச் மாதத்திலும், அதைத் தொடர்ந்து முதன்மை எழுத்துத் தேர்வு ஜூன் 2-வது வாரத்திலும், வாய்மொழித்தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படும்.
மாவட்ட நீதிபதி பதவிக்கு இளங்கலை சட்டம் (பி.எல்.) படித் திருக்க வேண்டும். 2009-2010-ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் சட்டம் படிப்பை முடித்தவராக இருந்தால் பார் கவுன்சில் நடத்திய அகில இந்திய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் தமிழ் நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மாநில பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்க வேண்டும். வழக்கறிஞர் பணியில் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதோடு தற்போது வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுப் பிரிவின ருக்கும், பிசி, எம்பிசி பிரிவினருக் கும் 35 முதல் 45 வரை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 35 முதல் 48 வரை. உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in அல்லது www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜனவரி 8-ம் தேதிக் குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்கள்...
தமிழ்வழியில் படித்தவர் களுக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படுகிறது. அந்த வகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 32 காலியிடங்களில் 6 இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி பதவிக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கல்வித்தகுதியான இளங்கலை சட்டப் படிப்பை தமிழ்வழியில் படித்தவர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
CENTRAL UNIVERSITY RECRUITMENT 2019 | THIRUVARUR CENTRAL UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் :20,26.12.2019.
- CENTRAL UNIVERSITY RECRUITMENT 2019 | THIRUVARUR CENTRAL UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : PROFESSOR, ASSOCIATE PROFESSOR, ASST PROFESSOR .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 29 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் :20,26.12.2019.
- இணைய முகவரி : www.cutn.ac.in
முக்கிய கல்விச்செய்திகள் |
வேலை வாய்ப்பு செய்திகள் |
LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
KALVISOLAI - WHAT'S APP GROUP |
KALVISOLAI - TELEGRAM GROUP |
THIRUVALLUVAR UNIVERSITY RECRUITMENT 2019 | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- THIRUVALLUVAR UNIVERSITY RECRUITMENT 2019 | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : PROFESSOR, ASSOCIATE PROFESSOR, PROFESSOR.
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 11 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2019.
- இணைய முகவரி : www.tvu.edu.in