உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, January 6, 2019

RRB - ரெயில்வேயில் 14,033 பணிகள் | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.01.2019

ரெயில்வே துறையில் ஜூனியர் என்ஜினீயர், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 14 ஆயிரத்து 33 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு மட்டும் 13083 பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. டெப்போ மெட்டீரியல் அசிஸ்டன்ட் பணிக்கு 456 இடங்களும், கெமிக்கல் அண்ட் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் பணிக்கு 494 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு 1-1-2019-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. பட்டதாரி என்ஜினீயர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் கெமிக்கல் மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.rrcb.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment