Sunday, March 22, 2020

ICCR RECRUITMENT 2019 | ICCR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

இந்திய கலாசார தொடர்புத்துறை கவுன்சில் சுருக்கமாக ஐ.சி. சி.ஆர். எனப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் திட்ட அதிகாரி, உதவித் திட்ட அதிகாரி, உதவியாளர், சீனியர் ஸ்டெனோகிராபர், ஜூனியர் ஸ்டெனோகிராபர், எல்.டி.சி. போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பணிக்கும் என்னென்ன கல்வித்தகுதி, வயது வரம்புடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். வயது வரம்பு தளர்வு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்களை https://iccr.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 8-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SAC RECRUITMENT 2019 | SAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

இஸ்ரோவின் கீழ் செயல்படும் ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டர் எனப்படும் ஆராய்ச்சி பிரிவு அகமதாபாத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர், என்ஜினீயர், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 55 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னீசியன், அசிஸ்டன்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர், என்ஜினீயர் பிரிவில் பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.sac.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

தமிழக மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் மின்பகிர்மான கழகத்தில் 2900 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 900 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்கலாம்.

கல்வித்தகுதி

எலக்ட்ரீசியன், வயர்மேன், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் என்.டி.ஏ., என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்

முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) ஆகியோர் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப் படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுகள் நடைபெறும் நாள் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு நாளை (மார்ச் 24) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 23-ந் தேதியாகும். தேர்வுக் கட்டணம் வங்கியில் செலுத்த ஏப்ரல் 28-ந் தேதி கடைசிநாளாகும்.

விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.tangedco.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN CENTRAL COOP BANK RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.

  • TN CENTRAL COOP BANK  RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவியாளர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1383 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.
  • இணைய முகவரி : www.slmdrb.in
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 1383 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சில மாவட்ட பணியிடங்கள் பற்றி பார்த்தோம். இங்கு மேலும் சில மாவட்டங்களில் வாரியான பணியிட விவரம்:

சேலம் - 166, தர்மபுரி - 119, திண்டுக்கல்-111, கன்னியாகுமரி- 40, அரியலூர் -25, பெரம்பலூர்- 28, சிவகங்கை -37, தேனி -20, மதுரை -136, தூத்துக்குடி -96, திருச்சி -181, திருநெல்வேலி - 70, திருவண்ணாமலை -127, விழுப்புரம் -108, விருதுநகர் -119. மொத்தம் -1383 பணியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள், கிளைகள் வாரியான காலியிட விவரங்கள், இட ஒதுக்கீடு அடைப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருசில மாவட்ட கூட்டுறவு வங்கி பணிகளுக்கு ஏற்கனவே கடந்த 2019, ஆகஸ்டு, செப்டம்பர் காலங்களில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

சேலம் மாவட்ட பணிகளுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.slmdrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இது போல ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு பணிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி மாறுபடுகிறது. அதிகபட்சமாக மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏப்ரல் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.‘

இதுபற்றிய விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி இணையதள பக்கத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, March 18, 2020

TANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கள உதவியாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.

  • TANGEDCO RECRUITMENT 2019 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கள உதவியாளர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2900 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 19.03.2020.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2020.
  • இணைய முகவரி : www.tangedco.gov.in
  • விளம்பரம் : CLICK HERE

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, March 15, 2020

கப்பல் தள நிறுவனத்தில், டிசைனர், ஜூனியர் சூப்பிரவைசர், ஆபீஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் பயர் இன்ஸ்பெக்டர் பணி

‘இந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிடெட்’ எனப்படும் கப்பல் தள நிறுவனத்தில், டிசைனர், ஜூனியர் சூப்பிரவைசர், ஆபீஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் பயர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 51 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரிகள் அனைவருக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏப்ரல் 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை https://www.hslvizag.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர்

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர் உள்பட பல்வேறு பணிகள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 242 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுருக்கமாக டி.என்.பி.சி.பி. (TNPCB) எனப்படுகிறது. தற்போது இந்த அமைப்பில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர், உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 242 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

உதவி என்ஜினீயர் பணிக்கு 78 இடங்களும், என்விரான்மென்டல் சயின்டிஸ்ட் பணிக்கு 70 இடங்களும், அசிஸ்டன்ட் பணிக்கு 38 இடங்களும், டைப்பிஸ்ட் பணிக்கு 56 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 12-2-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

சிவில், கெமிக்கல், என்விரான்மென்டல் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்புடன் முதுநிலை தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோர் ரூ.250-ம், மற்றவர்கள் ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 26-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.tnpcb.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.

  • BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
  • இணைய முகவரி : http://www.bhel.com/ 
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் ஜகதீஸ்பூர் கிளையில், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 51 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், வெல்டர், மெக்கானிக், உள்பட பல பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.bhel.com/ இணையதளத்தில் பார்த்துவிட்டு மார்ச் 20-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • இணைய முகவரி : www.drdo.gov.in
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.வின் கீழ், செயல்படும் துணை அமைப்பு அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லேபரேட்டரி. ஐதராபாத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள், டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோ ஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பட்டதாரி பயிற்சி பணிகளுக்கும், டிப்ளமோ படித்தவர்கள் டெக்னீசியன் பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள், அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.

இது பற்றிய அறிவிப்பு மார்ச் 7-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை www.drdo.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (SAIL) எனப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பர்ன்பூர் இஸ்கோ ஸ்டீல் பிளான்ட் கிளையில் தற்போது டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்...

28-2-2020-ந் தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action என்ற இணைய பக்கத்தின் வழியாக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு, பின்னர் இஸ்கோ ஸ்டீல் பிளான்ட் நிறுவன https://sail.co.in/iisco-steel-plant/about-iisco-steel-plant இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 17-ந் தேதியாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிகள்

  • பங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய பங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ‘செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா’ செயல்படுகிறது. சுருக்கமாக செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

பொது, சட்டம், ஐ.டி., பொறியியல், ஆராய்ச்சி, மொழி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக பொது பிரிவில் 80 இடங்களும், சட்டப் பிரிவில் 34 இடங்களும், ஐ.டி. பிரிவில் 22 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 29-2-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி

சி.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பொது பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம், எம்.சி.ஏ., சிவில், எலக்ட்ரிக்கல், என் ஜினீயரிங் படித்தவர்கள் இவை சார்ந்த பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், மொழி மற்றும் ஆராய்ச்சி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும், மற்றவர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 23-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதற்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 12-ந் தேதியும், இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வு, மே 3-ந் தேதியும் நடத்தப்படுகிறது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கவும், இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sebi.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள்

  • ரெயில் என்ஜின் நிறுவனம், உருக்கு நிறுவனம், ராணுவ நிறுவனம் போன்றவற்றில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்...

ரெயில் என்ஜின் நிறுவனம்

மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படுகிறது ‘டீசல் லோகோ மாடனிசேசன் ஒர்க்ஸ்’. ரெயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனமான இது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் செயல்படுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர், வெல்டர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேருக்கு பணி வாய்ப்பு என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு படித்தவர்கள் வெல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வெல்டர் பணிக்கு 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஏப்ரல் 20-ந்தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் மே அல்லது ஜூன் மாதம் முதல் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.

இது பற்றிய விவரத்தை https://dmw.indianrailways.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 469 பணியிடங்கள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 469 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 133 பணியிடங்களும், இந்த மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பல்வேறு நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 113 இடங்களும் நிரப்பப் படுகின்றன.

மேலும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 62 இடங்களும், கடலூர் மாவட்டத்தில் 64 இடங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 97 இடங்களும் நிரப்பப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள், கிளைகள் வாரியான காலியிட விவரங்கள், இட ஒதுக்கீடு அடைப் படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

காஞ்சீபுரம் மாவட்ட பணி களுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.kpmdrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இது போல நாமக்கல் மாவட்டத்திற்கு மார்ச் 31-ந் தேதிக்குள்ளும், திருப்பூர் மாவட்ட பணிகளுக்கு ஏப்ரல் 6-ந் தேதிக்குள்ளும், கடலூர் மாவட்ட பணிகளுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.

  • NLC RECRUITMENT 2019 | NLC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 315 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2020.
  • இணைய முகவரி : www.nlcindia.com
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 315 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. என அழைக்கப் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 259 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங், ஜியாலஜி, நிதி, எச்.ஆர். போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக மெக்கானிக்கல் பிரிவில் மட்டும் 125 பணியிடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 75 இடங்களும் உள்ளன.

பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், ஜியாலஜி, நிதி, சி.ஏ., சி.எம்.ஏ., முதுநிலை படிப்புடன் எச்.ஆர். டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 1-3-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.854 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ரூ.354 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 18-ந் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. ஏப்ரல் 17-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதற்கான தேர்வு மே 26, 27-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி இண்டஸ்ட்ரியல் டிரெயினி (நிதி) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு சி.ஏ., ஐ.சி.ஏ.ம்.ஏ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 28 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 26-ந் தேதியாகும்.

இது பற்றிய விவரங்களையும் மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தஞ்சாவூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

  • தஞ்சாவூா் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாா்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் இரு ஆய்வக உடனாள், இரு அலுவலக உதவியாளா், 3 ஓட்டுநா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

ஓட்டுநா் பதவிக்கு ஆதிதிராவிடா் (அருந்ததியினா்), பெண்கள், ஆதரவற்ற விதவைகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை. எனவே, ஆதிதிராவிடா் (அருந்ததியினா்) பொது என்ற இனசுழற்சி அடிப்படையில் ஓட்டுநா் பதவிக்கு ஒரு நபா் தோ்வு செய்யப்படுவா். மேலும், ஓட்டுநா் பதவிக்கு பொதுப் பிரிவுக்கு பதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர) பொது என்ற இனசுழற்சி அடிப்படையில் ஒரு நபா் தோ்வு செய்யப்படுவா். இந்த இரு ஓட்டுநா் காலிப்பணியிடங்களுக்கும் தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஜன. 23-ம் தேதி செய்யப்பட்ட விளம்பரத்திலுள்ள நடைமுறைகளின்படி விண்ணப்பங்கள் பெறப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை, பழைய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூா் 613 001 என்ற முகவரிக்கு மாா்ச் 20 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கப்பட வேண்டும். அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • DISTRICT RECRUITMENT BUREAU RECRUITMENT 2019 | மாவட்ட கூட்டுறவு வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவியாளர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020
  • இணைய முகவரி : http://www.cuddrb.in
கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 64 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 64
Assistant In Cooperative Institutions In Cuddalore District (Other Than Cuddalore District Central Cooperative Bank)

பணி: Assistant - 20

Assistant In Cuddalore District Central Cooperative Bank
பணி:  Assistant - 44

தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.14,000 - ரூ.47,500

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.cuddrb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cuddrb.in/doc_pdf/Notification_2.pdf  எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.05.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2020 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, March 9, 2020

BSF RECRUITMENT 2020 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.

  • BSF RECRUITMENT 2020 | BSF  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
எல்லை பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

எல்லைப் பாதுகாப்புப் படை சுருக்கமாக பி.எஸ்.எப். (BSF) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த படைப்பிரிவின் புதுடெல்லி தலைமை பொது இயக்குனரகத்தில் இருந்து ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள், மெக்கானிக், ஏ.சி.டெக்னீசியன், பிளம்பர் உள்ளிட்ட குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அதிகபட்சமாக ஹெட்கான்ஸ்டபிள் (மாஸ்டர்) பணிக்கு 56 இடங்களும், ஹெட்கான்ஸ்டபிள் (என்ஜின் டிரைவர்) பணிக்கு 68 இடங்களும் உள்ளன. கான்ஸ்டபிள் தரத்திலான குரூவ் பணிக்கு 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணிகளுக்கு 22 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 20 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது பட்டதாரி என்ஜினீயரிங் படித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ஒர்க்சாப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) படித்தவர்கள் ஹெட்கான்ஸ்டபிள் மற்றும், கான்ஸ்டபிள் தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பணிசார்ந்த பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்

சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணி களுக்கு ரூ.200-ம், இதர பணிகளுக்கு ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 16-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள், கட்டண டி.டி. ஆகியவை இணைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பதிவிறக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in, www.bsf.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.

  • SSC RECRUITMENT 2020 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
மத்திய அரசு துறைகளில் 1355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை எஸ்.எஸ்.சி. அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு துறைகளில் பேஸ்-8 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

லேப் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் என்ஜினீயர், சயின்டிபிக் அசிஸ்டன்ட், பீல்ட் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் ஆபீசர், டயட்டீசியன், டெக்னிக்கல் சூப்பிரன்டென்ட், டெக்ஸ்டைல் டிசைனர், பமிகேசன் அசிஸ்டன்ட், லேப் அட்டன்ட், லைபிரரி இன்பர்மேசன் அசிஸ்டன்ட், லைபிரரி கிளார்க், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது.

ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிடங்கள், ஒவ்வொரு துறையில் உள்ள காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். மொத்தம் 1355 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. பல பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆபரேட்டர், லைபிரரி கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்களுக்கு லேப் அசிஸ்டன்ட், பமிகேசன் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகளுக்கும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) ஜூன் மாதம் 10,11,12-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020.

  • NIT RECRUITMENT 2020 | NIT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020.
என்.ஐ.டி. கல்வி மையங்களில் கற்பித்தல் - கற்பித்தல் சாராத அலுவலக பணிகளுக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தின் பல்வேறு கிளைகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 76 இடங்களும், சூரத் என்.ஐ.டி.யில் 73 இடங்களும், அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 58 இடங்களும், மேகலாயாவில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 30 இடங்களும் நிரப்பப்படுகிறது.

ஸ்ரீநகர்

என்.ஐ.டி.யின் ஸ்ரீநகர் கிளையில் உதவி பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, மெக்கானிகல், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல்ஸ், கெமிஸ்ட்ரி, ஹியூமனிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்ஸ், மேத்தமேடிக்ஸ் போன்ற துறைகளில் பணியிடங்கள் உள்ளன.

உதவி பேராசிரியர் பணிக்கு 59 இடங்களும், இணை பேராசிரியர் போன்ற பணிகளுக்கு 13 இடங்கள், பேராசிரியர் பணிக்கு 4 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்துறையிலும் உள்ள பணியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

மேற்கண்ட துறை சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் www.nitsri.ac.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

சூரத்

சர்தார் வல்லபாய் என்.ஐ.டி. சூரத்தில் செயல்படுகிறது. இங்கு உதவி பேராசிரியர் பணிக்கு 73 இடங்கள் நிரப்பப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கு 13 இடங்களும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு 17 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 14 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 8 இடங்களும் உள்ளன.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், அப்ளைடு மேத்தமேடிக்ஸ, அப்ளைடு பிசிக்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

இது சார்ந்த பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 2-ந் தேதியாகும்.

இது பற்றிய விவரங்களை www.svnit.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

அகர்தலா

அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் (கிரேடு-1, கிரேடு-2) பணிக்கு 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோ என்ஜினீயரிங், கணிதவியல், இயற்பியல், ஹியூமனிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்ஸ் உள்பட 14 பாடத்துறைகளில் பணியிடங்கள் உள்ளன.

இவை சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் படிப்புகள் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் http://www.nita.ac.in/ என்ற இணைய தளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 25-ந் தேதி (நாளை) கடைசி நாளாகும்.

மேகாலயா

மேகாலயா என்.ஐ.டி. கிளையில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேபரேட்டரி அட்டன்ட் போன்ற பணிகளுக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐ.டி.ஐ, பிளஸ்-2, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6-ந் தேதி கடைசி நாளாகும்.

இது பற்றிய விவரங்களை http://nitmeghalaya.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2020.

  • NESAC RECRUITMENT 2020 | வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2020.
வடகிழக்கு ஸ்பேஸ் அப்ளிகேசன்ஸ் சென்டர் (NESAC) அமைப்பு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். விண்வெளி துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது புராஜெக்ட் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 110 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம் போன்ற பல்வேறு இடங்களில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த இடங்களில் உள்ள காலிப்பணியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த, 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். இன்று (24-ந்தேதி) முதல் மார்ச் 11-ந்தேதி வரை நேர்காணல் நடக்கிறது.

எந்த நாளில், எந்த இடத்தில் உள்ள பணிகளுக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.nesac.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts