- TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள குரூப்-4 வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பணி
- கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 6,491
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.07.2019
- தேர்வு நாள் : 01.09.2019
- இணைய முகவரி : http://tnpscexams.in/
இளநிலை உதவியாளர், தட்டச்சர், விஏஓ உள்ளிட்ட பதவிகளில் 6,491 காலியிடங்களை நிரப்பு வதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நேற்று தொடங்கியது. வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட் டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-2) மற்றும் வரைவாளர், வரித்தண்டலர் ஆகிய 8 விதமான பதவிகளில் 6,491 காலியிடங் களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக் கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய தொழில்நுட்ப பதவிகள் நீங்கலாக இதர பதவி களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம். பதவிகளுக்கு ஏற்ப வயது வரம்பு வெவ்வேறாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனி னும் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந் தால் (பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல்) அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்றும் தகுதி யுடையவர்கள் தேர்வாணையத் தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி ஜூலை 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுக்கான அறிவிக்கை வெளியான வெள்ளிக்கிழமை (நேற்று) முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. குரூப்-4 தேர்வைப் பொறுத்தவரை, நேர் முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே போதுமானது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் (இரண்டில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்) 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண் கள். தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜனவரியி லும் அதைத்தொடர்ந்து கலந் தாய்வு பிப்ரவரியிலும் நடத் தப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment