உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, August 11, 2019

வேலை - கால அட்டவணை - 15.07.2019

 • IBPS RECRUITMENT 2019 | IBPS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 30-11-2019 .
 • இணைய முகவரி : www.ibps.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

RMLH RECRUITMENT 2019 | RMLH அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : நர்சிங் அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 852 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.

 • RMLH RECRUITMENT 2019 | RMLH அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : நர்சிங் அதிகாரி பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 852 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.
 • இணைய முகவரி : https://rmlh.nic.in/

லோகியா மருத்துவமனையில் 852 பணிகள் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மத்திய மருத்துவ நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது இந்த மருத்துவமனையின் கிளையில் நர்சிங் அதிகாரி பணிக்கு 852 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வரும் ஆகஸ்டு 21-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். ஜி.என்.எம்., பி.எஸ்சி நர்சிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.1200 செலுத்தினால் போதுமானது. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://rmlh.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : நர்சிங் அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 503 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.

 • AIIMS RECRUITMENT 2019 | AIIMS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : நர்சிங் அதிகாரி பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 503 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.
 • இணைய முகவரி : https://www.aiimsexams.org/

எய்ம்ஸ் மற்றும் மத்திய மருத்துவ மையத்தில் 1355 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எய்ம்ஸில் 503 பணிகள் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. தற்போது புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் கிளையில் நர்சிங் அதிகாரி பணிக்கு 503 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகஸ்டு 21-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு, கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஆகஸ்டு 21-ந் தேதியாகும். இதற்கான தேர்வு செப்டம்பர் 15-ந் தேதி நடக்க உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.aiimsexams.org/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PDILIN RECRUITMENT 2019 | PDILIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 391 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-8-2019.

 • PDILIN RECRUITMENT 2019 | PDILIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 391 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-8-2019.
 • இணைய முகவரி : https://www.pdilin.com/
இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனம் சுருக்கமாக பி.டி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 391 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

என்ஜினீயர் பணிக்கு கிரேடு-1 தரத்தில் 61 பேரும், கிரேடு-2 பணிக்கு 171 பேரும், கிரேடு-3 பணிக்கு 109 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர் பணிக்கு 37 பேரும், சீனியர் டிராப்டிங் ஸ்டாப் பணிக்கு 13 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு என்ஜினீயர் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.400 கட்டணம் செலுத்த வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 21-8-2019-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.pdilin.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NTPC RECRUITMENT 2019 | NTPC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-8-2019.

 • NTPC RECRUITMENT 2019 | NTPC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 79 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-8-2019.
 • இணைய முகவரி : https://www.ntpc.co.in/en
தேசிய அனல் மின் நிலைய நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் டிரெயினி, லேப் அசிஸ்டன்ட், டிப்ளமோ டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்...

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு அசிஸ்டன்ட், லேப் அசிஸ்டன்ட் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-8-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://www.ntpc.co.in/en என்ற இணையதளத்தில் பார்க்கலாம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

VSSC RECRUITMENT 2019 | VSSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 158 . நேர்காணல் நாள் : 17.08.2019.

 • VSSC RECRUITMENT 2019 | VSSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 158 .
 • நேர்காணல் நாள் : 17.08.2019.
 • இணைய முகவரி : https://www.vssc.gov.in/VSSC/
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 158 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். நேரடி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள். வருகிற 17-ந் தேதி இதற்கான நேர்காணல் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களைஅறிய https://www.vssc.gov.in/VSSC/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

THDC RECRUITMENT 2019 | THDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.

 • THDC RECRUITMENT 2019 | THDC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : பயிற்சிப் பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2019.
 • இணைய முகவரி : https://www.thdc.co.in/
தேசிய நீர்மின் நிறுவனமான டி.எச்.டி.சி. நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், புட் புரொடக்சன், புட் அண்ட் பீவரேஜ் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆகஸ்டு 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.thdc.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : அதிகாரி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 415 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-9-2019.

 • UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : அதிகாரி பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 415 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-9-2019.
 • இணைய முகவரி : www.upsconline.nic.in
இந்திய ராணுவ அகாடமிகளில் 415 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி களுக்கான தேர்வு-2019(2) (சி.டி.எஸ்.-2019(2) தேர்வு) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 415 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

இதில் இந்திய மிலிட்டரி அகாடமியில் 208 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 42 பேரும், விமானப்படை அகாடமியில் 120 பேரும், கடற்படை அகாடமியின் கேடட் என்ட்ரி சேர்க்கையில் 45 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:
ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமி பணி விண்ணப்பதாரர்கள் 2-1-2001 மற்றும் 1-1-2004 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் சென்னை ஆபீஸர் டிரெயினிங் அகாடமியில் சேரும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.விமானப்படை அகாடமியில் சேர்பவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படையில் சேர்பவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள் :
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 3-9-2019-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 17-11-2019 அன்று நடைபெற உற்றது.

கூடுதல் விவரங்களை பார்க்க www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 144 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.08.2019.

 • NIT RECRUITMENT 2019 | NIT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர்  உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 144 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.08.2019.
 • இணைய முகவரி : http://www.manit.ac.in/content/faculty-recruitment-2019
மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் போபாலில் செயல்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

முதுநிலை பட்டப்படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் ஆய்வு செய்து கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரம், வயது வரம்பு, கட்டண விவரம் உள்ளிட்ட இதர விவரங்களை http://www.manit.ac.in/content/faculty-recruitment-2019 என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்டு 18-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நகல் விண்ணப்பம் ஆகஸ்டு 26-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டிரேடு அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 875 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.

 • NLC RECRUITMENT 2019 | NLC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : டிரேடு அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சி உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 875 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.08.2019.
 • இணைய முகவரி : www.nlcindia.com
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக (என்.எல்.சி.) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் டிரெயினி பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 875 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான காலியிட விவரம் : பிட்டர்- 120, டர்னர் - 50, மெக்கானிக் - 130, எலக்ட்ரீசியன் - 130, வயர்மேன் - 120, மெக்கானிக் (டீசல்) 15, மெக்கானிக் (டிராக்டர்) 15, கார்பெண்டர் - 5, பிளம்பர் - 10, ஸ்டெனோகிராபர் - 20, வெல்டர் - 100, பி.ஏ.எஸ்.எஸ்.ஏ. - 40, அக்கவுண்டன்ட் - 40, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 40, அசிஸ்டன்ட் (எச்.ஆர்.) - 40 இடங்கள் உள்ளன.

குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.காம் படித்தவர்கள் அக்கவுண்டன்ட் பணிக்கும், பி.சி.ஏ., பி.எஸ்.சி., படித்தவர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அசிஸ்டன்ட் எச். ஆர். பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-10-2019-ந் தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று (12-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான சான்றுகள் இணைத்து ஆகஸ்டு 26-ந் தேதிக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவன கற்றல் மேம்பாட்டு மைய, பொது மேலாளர் அலுவலகத்தை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய ஆட்சிப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதையடுத்து முதன் மைத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. இந்த வருடம் குடிமைப் பணிகளுக்கு 896 இடங்கள் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.

 • IBPS RECRUITMENT 2019 | IBPS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 30-11-2019 .
 • இணைய முகவரி : www.ibps.in
வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு. 4336 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 4336 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ. பி.எஸ்.)’ அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர் களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது.தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான 9-வது பொது எழுத்து தேர்வு ( CRP- PO/MT-IX) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 14 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.மொத்தம் 4 ஆயிரத்து 336 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவுக்கு 2031 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 904 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 670 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 299 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 432 இடங்களும் உள்ளன. வங்கிகள் வாரியான முழுமையான பணியிட விவரம் மற்றும் அந்தந்த வங்கிகளில் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2019 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1989-ந் தேதிக்கு முன்னரும், 1-8-1999-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.

கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28-8-2019
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் : அக்டோபர் 12, 13, 19, 20 -ந் தேதிகள்
முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 30-11-2019
பொது நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவரி 2020
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, August 5, 2019

NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 22 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-8-2019.

 • NIT RECRUITMENT 2019 | NIT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 22  .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-8-2019.
 • இணைய முகவரி : http://www.nitmanipur.ac.in
தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் மணிப்பூர் கிளையில் தற்போது பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிவியல் தொழில்நுட்ப பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.nitmanipur.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9-8-2019-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NIFT RECRUITMENT 2019 | NIFT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 179 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.09.2019. இணைய முகவரி : www.nift.ac.in

 • NIFT RECRUITMENT 2019 | NIFT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவி பேராசிரியர்   உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 179 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.09.2019.
 • இணைய முகவரி : www.nift.ac.in
தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சுருக்கமாக ‘நிப்ட்’ (NIFT) எனப்படுகிறது. புதுடெல்லியில் உள்ள நிப்ட் கல்வி மையத்தில் இருந்து உதவி பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 179 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 74 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 26 இடங்களும், எஸ்.டி.பிரிவினருக்கு 13 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 49 இடங்களும் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

முதுநிலை படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. செப்டம்பர் 6-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nift.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி போர்மேன், சுரங்க உதவியாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 . விளம்பர அறிவிப்பு நாள் : 11-7-2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2019.

 • HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவி போர்மேன், சுரங்க உதவியாளர்   உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 11-7-2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.08.2019.
 • இணைய முகவரி : www.hindustancopper.com
இந்துஸ்தான் காப்பர் எனப்படும் இந்திய செம்பு தொழிற்சாலை நிறுவனத்தில் உதவி போர்மேன், சுரங்க உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 26 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மைன் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் சுரங்க உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உதவி போர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.hindustancopper.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய அறிவிப்பு 11-7-2019-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TMC RECRUITMENT 2019 | TMC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • TMC RECRUITMENT 2019 | TMC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : சயின்டிபிக் அசிஸ்டன்ட், போர்மேன், பார்மசிஸ்ட், டெக்னீசியன், அட்மின் ஆபீசர், லோயர் டிவிசன் கிளார்க்,  சமையல்காரர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 118 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2019.
 • இணைய முகவரி : https://tmc.gov.in
டாடா நினைவு மையம் எனும் மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் மருத்துவ அறிவியல் மையம், மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள் செயல்படுகின்றன.

தற்போது இந்த அமைப்பின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்படும் ஹோமி பாபா புற்றுநோய் மையத்தில் துணை மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்ஸ் பணிக்கு 83 இடங்கள் உள்பட மொத்தம் 118 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சயின்டிபிக் அசிஸ்டன்ட், போர்மேன், பார்மசிஸ்ட், டெக்னீசியன், அட்மின் ஆபீசர், லோயர் டிவிசன் கிளார்க், சமையல்காரர் போன்ற பணிகளுக்கு கணிசமான காலியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. நர்ஸ் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதர பணியிடங்களில் ஐ.டி.ஐ., இளநிலை, முதுநிலை படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்டு 16-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://tmc.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SAIL RECRUITMENT 2019 | SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மெடிக்கல் சூப்பிரண்டென்ட், ஸ்பெஷலிஸ்ட், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2019.

 • SAIL RECRUITMENT 2019 | SAIL  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : மெடிக்கல் சூப்பிரண்டென்ட், ஸ்பெஷலிஸ்ட், உதவி பேராசிரியர்   உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2019.
 • இணைய முகவரி : www.sail.co.in
இந்திய உருக்கு ஆணைய நிறுவனமான செயில் (sail) தொழிற்சாலையின் ரூர்கேலா கிளையில் மெடிக்கல் சூப்பிரண்டென்ட், ஸ்பெஷலிஸ்ட், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு முதுநிலை மருத்துவம், முதுநிலை வேதியியல், டி.என்.பி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல்தகுதி கொண்டிருக்க வேண்டும். நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இது பற்றிய விரிவான விவரங்களை www.sail.co.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : தொழில்நுட்ப உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 191 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-8-2019.

 • INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : தொழில்நுட்ப பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 191 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-8-2019.
 • இணைய முகவரி : www.joinindianarmy.nic.in

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப் படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின்படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில்நுட்ப பிரிவில் 54-வது சேர்க்கையின்படி ஆண்களும், 25-வது சேர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள். எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் ஏப்ரல்-2020 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உள்ள பணியிட விவரங்களை மு/ழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1-4-2020-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதவைகள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

பி.இ., பி.டெக் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் ஆண்-பெண் இரு பாலரும் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். விதவைப் பெண்களுக்கு ஒன்றிரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யும் முறை

எஸ்.எஸ்.பி. அமைப்பின் மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலை தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். படங்களை புரிந்து கொள்ளுதல், நுண்ணறிவுத் திறன், உடல் திறன் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இதில் அடங்கும்.

அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சி யிலும் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் சேரலாம். மேலும் 18 நிலைகளில் பதவி உயர்வு பெறுவதுடன், 2½ லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வும் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 22-8-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

IRCTC RECRUITMENT 2019 | IRCTC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சூப்பிரவைசர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 85 . நேர்காணல் நடைபெற உள்ள நாள் : 14,16,19,21,24.08.2019 .

 • IRCTC RECRUITMENT 2019 | IRCTC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : சூப்பிரவைசர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 85 .
 • நேர்காணல் நடைபெற உள்ள நாள் : 14,16,19,21,24.08.2019 .
 • இணைய முகவரி : http://www.irctc.com
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஆர்.சி.டி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சூப்பிரவைசர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களுக்கு நேர்காணல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெற்கு மத்திய மண்டல பணி களுக்கு மொத்தம் 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது 2 ஆண்டு ஒப்பந்த அடிப் படையிலான பணியிடமாகும்.

இந்த பணியிடங்களுக்கு 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

பி.எஸ்சி (ஹாஸ்பிடாலிட்டி) அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். வருகிற 14,16,19,21,24-ந் தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. 5 இடங்களில் நேர்காணல் நடக்கிறது.

குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி எடுத்துச் செல்வதுடன், தேவையான சான்று களுடன் நேர்காணலுக்குச் செல்லலாம். இது பற்றிய விவரங்களை http://www.irctc.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டுச் செல்லலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CCRUM RECRUITMENT 2019 | CCRUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆய்வு அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 67 . விளம்பர அறிவிப்பு நாள் : 27.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.08.2019.

 • CCRUM RECRUITMENT 2019 | CCRUM அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஆய்வு அதிகாரி உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 67 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 27.07.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.08.2019.
 • இணைய முகவரி : http://ccrum.res.in
மத்திய யுனானி மருந்து ஆராய்ச்சி கவுன்சிலில் ஆய்வு அதிகாரி பணிக்கு 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோகெமிஸ்ட்ரி, பேதாலஜி, யுனானி, கிளினிகல் பார்மகாலஜி படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கெமிஸ்ட்ரி படித்தவர்கள் ஆய்வு உதவியாளர் பணிக்கும், இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://ccrum.res.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை-27, ஆகஸ்டு-2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியுஸ் இதழில் இதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆராய்ச்சியாளர் மற்றும் என்ஜினீயர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 290 . விளம்பர அறிவிப்பு நாள் : 29.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.08.2019.

 • DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : ஆராய்ச்சியாளர் மற்றும் என்ஜினீயர்   உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 290 .
 • விளம்பர அறிவிப்பு நாள் : 29.07.2019.
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.08.2019.
 • இணைய முகவரி : https://rac.gov.in
ராணுவ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் - என்ஜினீயர் பணிகளுக்கு 290 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ. எனப்படுகிறது. இந்திய ராணுவத்துக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்திற்கு தேவையான ஆய்வாளர்களை தேர்வு செய்ய ரெக்ரூட்மென்ட் அண்ட் அசெஸ்மென்ட் சென்டர் எனும் அமைப்பு செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு ஆராய்ச்சியாளர் மற்றும் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பி - கிரேடு தரத்திலான இந்த பணிக்கு மொத்தம் 290 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும், ராணுவத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது.

கல்வித்தகுதி

என்ஜினீயரிங்/ டெக்னாலஜி பட்டப்படிப்பு படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூலை 29-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://rac.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : யந்த்ரிக் உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-8-2019

 • INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : யந்த்ரிக் உள்ளிட்ட பணி .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-8-2019
 • இணைய முகவரி : www.joinindiancoastguard.gov.in
கடலோர காவல் படையில் பயிற்சியுடன் கூடிய ‘யந்த்ரிக்’ பணிக்கு டிப்ளமோ படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய கடலோர காவல் படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த படைப்பிரிவில் தற்போது ‘யந்திரிக்/1-2020 பேட்ஜ்’ பயிற்சியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 3 வருட டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-2-1998 மற்றும் 31-1-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன் (ரேடியோ/பவர்) பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ படிப்பை முழு நேரமாக படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

உடற்தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியுடன் 6/9 மற்றும் 6/12 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடாது. உடல் நலம் மற்றும் உளநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 17-8-2019-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விரிவான விவரங்களை www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNFOREST RECRUITMENT 2019 | TNFOREST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : வனவர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2019.

 • TNFOREST RECRUITMENT 2019 | TNFOREST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : வனவர் உள்ளிட்ட பணி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.08.2019.
 • இணைய முகவரி : www.forest.tn.gov.in

தமிழ்நாடு வன சீருடைப்பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த மார்ச் மாதம் வனவர் பணிக்கு 564 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்டு 10-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.forest.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE