- தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் பல்வேறு கிளைகளில் தற்போது கற்பித்தல் மற்றும் கற்பித்ததால் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஜலந்தரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், ஜூனியர் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், சீனியர் ஸ்டெனோகிராபர், ஆபீஸ் அட்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 93 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள், முதுநிலை பட்டதாரிகளுக்கு பணி யிடங்கள் உள்ளன.
- 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அந்தந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
- விரிவான விவரங்களை http://www.nitj.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, அக்டோபர் 2-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- இதேபோல ஜாம்ஷெட்பூரில் செயல்படும் என்.ஐ.டி.யில் சூப்பிரன்டென்ட் என்ஜினீயர், டெபுடி லைபிரரியன், மெடிக்கல் ஆபீசர், பிரின்சிபல் சயின்டிபிக் டெக்னிக்கல் ஆபீசர், சூப்பிரன்டென்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், டெக்னீசியன், சீனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் மற்றும் இதர பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு உள்ளது.
- சில பணிகளுக்கு பிளஸ்-2 படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு அக்டோபர் 4-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- பின்னர் நகல் விண்ணப்பத்தை ஒரு வார காலத்திற்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
- இது பற்றிய விவரங்களை http://www.nitjsr.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
என்.ஐ.டி. கல்வி மையங்களில் வேலை
டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் வேலை
- இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (SAIL) எனப்படுகிறது.
- தமிழகத்தின் சேலம் உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன.
- தற்போது பொக்காராவில் செயல்படும் உருக்கு நிறுவனத்தில் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு இவர்கள் சேர்க்கப் படுகிறார்கள்.
- மொத்தம் 463 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- பிரிவு வாரியாக ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 95 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர்) 10 இடங்களும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 121 இடங்களும் உள்ளன. ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர்) பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- 11-10-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு பின்பற்றப்படுகிறது.
- 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்பு டிரேடு டெஸ்ட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அட்டன்ட் பணிக்கும், குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பாய்லர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 11-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
- https://www.sail.co.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்க்கலாம்.
நிலக்கரி நிறுவனத்தில் 750 பயிற்சிப் பணிகள்
- மத்திய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்.
- மத்திய இந்திய பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த அமைப்பில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 750 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரம்: பிட்டர் -250, வெல்டர் -40, எலக்ட்ரீசியன் -360, மெக்கானிக் -45, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டன்ட் -15, பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக்- 5, மெஷினிஸ்ட் -20, டர்னர் -15 இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15-10-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
- பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- அக்டோபர் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
- இது பற்றிய விரிவான விவரங்களை http://www.centralcoalfields.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
தமிழக போக்குவரத்து கழகத்தில் 660 பயிற்சிப்பணி
- தமிழ்நாடு போக்குவரத்து கழக நிறுவனத்தின் கும்பகோணம், விழுப்புரம், நாகர்கோவில், திருநெல்வேலி கிளைகளில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 660 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் 218 பேரும், டெக்னீசியன் பிரிவில் 442 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் பி.இ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள்இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- அக்டோபர் 11-ந்தேதிக்குள் http://www.boat-srp.com என்ற தளத்தில் பெயரை பதிவு செய்துகொண்டு, 21-ந் தேதிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
- இதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி அக்டோபர் 30,31 மற்றும் நவம்பர் 1,2-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
- இது பற்றிய விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
பஞ்சாப் சிந்த் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
- பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் சிந்த் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 168 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சட்ட மேலாளர், பயர்சேப்டி ஆபீசர், செக்யூரிட்டி ஆபீசர், அக்ரி பீல்டு ஆபீசர், சாட்டர்டு அக்கவுண்டன்ட், சாப்ட்வேர் டெவலப்பர், ஐ.டி. புரோகிராமர், டெக்னிக்கல் ஆபீசர் (சிவில், எலக்ட்ரிக்கல்), கம்பெனி செகரட்ரி, ஏ.ஜி.எம்., ராஜ்பாஷா அதிகாரி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
- ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
- ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஏ.ஜி.எம், ராஜ்பாஷா அதிகாரி, கம்பெனி செகரட்ரி போன்ற பணியிடங்களில் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் மற்ற பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
- பி.இ., பி.டெக், சட்டம், சி.ஏ. மற்றும் இதர பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு உயர் அதிகாரி பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
- அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.826 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.177 கட்டணம் செலுத்தினால் போது மானது. இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 10-ந் தேதியாகும்.
- இது பற்றிய விரிவான விவரங்களை https://www.psbindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
- ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணியிடங்கள் ரிசர்வ் வங்கி மற்றும் பஞ்சாப் சிந்த் வங்கியில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 367 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு: இந்திய வங்கிகளின் வங்கி எனப்படுவது ரிசர்வ் வங்கி. ஆர்.பி.ஐ. என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வங்கியில் தற்போது அதிகாரி (கிரேடு-பி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 199 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2019 செப்டம்பர் 1-ந்தேியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
- ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு தேர்ச்சிக்குப் பின்பு எம்.பி.ஏ. அல்லது முதுநிலை மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- இவர்கள் இடைவிடாமல் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ. 850 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
- இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 11-ந் தேதியாகும்.
- இந்த பணிகளுக்கான தேர்வு இரு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலை (தாள்1) தேர்வு நவம்வர் 9-ந் தேதி நடத்தப்படுகிறது.
- இரண்டாம் நிலை எழுத்துத்தேர்வு (தாள்1,2,3) தேர்வு டிசம்பர் 1,2-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
- விருப்பம் உள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதள பக்கத்தை பார்த்து விட்டு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் பணி
- மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் பணிகளுக்கான தேர்வு 495 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
- மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்பும் ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வை யூ.பி.எஸ்.சி. அமைப்பு அறிவித்து உள்ளது.
- மொத்தம் 495 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது.
- மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களையும், இந்த அமைப்பு தேர்வு நடத்தி தகுதியானவர்கள் மூலம் நிரப்பி வருகிறது.
- தற்போது அரசு துறைகளில் ஏற்படும் என்ஜீனியரிங் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வை அறிவித்து உள்ளது.
- ‘என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாம்-2020’ எனப்படும் இந்த தேர்வின் மூலம், மொத்தம் 495 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- ரெயில்வே துறை, மத்திய என்ஜினீயரிங் சர்வீஸ், மத்திய சாலைப்பணிகள், சிவில் என்ஜினீயரிங் பணிகள் பிரிவு, சர்வே ஆப் இந்தியா, பார்டர் ரோடு என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் டிபென்ஸ் சர்வீஸ் என்ஜினீயர், சர்வேயர் கேடர், மத்திய நீர் பொறியியல் பணிகள், திறன் மேம்பாட்டு பணிகள் , டெலிகாம் பிரிவு உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:- வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-1-2020 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-1-1989-ந்தேதி மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
- கல்வித்தகுதி: பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், எம்.எஸ்.சி. அறிவியல் படிப்புகளில் என்ஜினீயரிங் சார்ந்த அறிவியல் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- உடல்தகுதி: குறிப்பிட்ட துறை பணிகளில் சேர்வதற்கு உடல்தகுதி அவசியம். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் அளவுத் தேர்வு மூலம் இவை சோதிக்கப்படும்.
- கட்டணம் : பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும்.
- விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- முன்னதாக புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்வதுடன், தேவையான சான்றுகளை நகல் எடுத்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.
- இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-10-2019-ந் தேதியாகும் , இதற்கான முதல்நிலைத் தேர்வு வருகிற 2020 ஜனவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது.
- விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி கிளார்க் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் நடக்கிறது
1,234 கிராம சுகாதார செவிலியர் பணி நியமனம்
- தமிழகத்தில் காலியாக உள்ள 1,234 கிராம செவி லியர் பணியிடங்களுக் குத் தகுதியான பெண் கள், சான்றிதழ்களுடன் அக்.4-ம் தேதிக்குள் சாந் தோமில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
- இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதா லட்சுமி வெளியிட்ட செய் திக்குறிப்பு: தமிழகத்தில் 1,234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண் பதிவு தாரர்கள், மாநில அள விலான உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவல கத்தின் மூலம் பரிந் துரைக்கப்பட உள்ளனர்.
- எனவே, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பொது சுகா தாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரால் வழங் கப்பட்ட 18 மாத பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வர்கள், அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு களுக்கான ‘AUXILIARY NURSE MIDWIFE’ அல்லது பல்நோக்கு சுகாதார பணி யாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், தமிழ்நாடு செவி லியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணிகளுக்கான கவுன்சிலில் கண்டிப்பாக பதிவு செய்திருத்தல் வேண்டும்.
- மேலும், கிராம சுகாதார செவிலியருக்கான பயிற்சியை அரசு பயிற்சி நிறுவனங்கள் அல்லது இந்தியன் நர்சிங் கவுன் சிலால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங் களிலோ பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.
- கடந்த ஜூலை 1-ம் தேதிப்படி முற்பட்ட வகுப் பினர் தவிர அனைத்து இதர வகுப்பினரும் 57 வயதுக்குள் இருக்க வேண் டும். முற்பட்ட வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி, வயது வரம்புக்கு உட்பட்டு பதிவு செய்த தகுதியான பதிவு தாரர்கள், அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமை பதிவு தொடர்பான சான்று, ஜாதிச் சான்று, இணையதள வழி பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன், சாந்தோமில் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில், அக்டோபர் 4-ம் தேதி வரை மாலை 3 மணிக்குள் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
SIPCOT RECRUITMENT 2019 | SIPCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2019.
- SIPCOT RECRUITMENT 2019 | SIPCOT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2019.
- இணைய முகவரி : www.sipcot.com
எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணி
ஹெவி என்ஜினீயரிங் கார்பரேசன் லிமிடெட் எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னிக்கல் ஒர்க்கர் பணி.
மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CIMF), புராஜெக்ட் அசிஸ்டன்ட் (லெவல் 1,2) பணி.
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் ஆபீசர் பணி. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.09.2019.
- மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், ரிசர்வேயர், டிரில்லிங், புரொடக்சன் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன.
- மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், அப்ளைடு ஜியாலஜி, பெட்ரோலியம் என்ஜினீயரிங், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மேனுபெக்சரிங், பவர் என்ஜினீயரிங், மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- விருப்பமுள்ளவர்கள் http://www.oil-india.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 28-ந் தேதியாகும்.
மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் சூப்பிரன்டென்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன், சீனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2019.
- அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- சூப்பிரன்டென்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், டெக்னீசியன், சீனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 106 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- பிளஸ்-2 படித்தவர்கள், என்ஜினீயரிங் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், இதர பட்டதாரிகள், முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கும் இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை http://www.mnnit.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- செப்டம்பர் 30-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
பரோடா வங்கியில் மேலாளர் தரத்திலான சிறப்பு அதிகாரி பணி.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயர் பணி
மாங்கனீசு தாது வள மத்திய நிறுவனத்தில் பல்வேறு அதிகாரி பணி.
தமிழகத்தில் 176 குடிமையியல் சிவில் நீதிபதி பணிகள். கடைசி நாள் 9-10-2019
இது பற்றிய விவரம் வருமாறு:
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு, தமிழக நீதித்துறையில் ‘சிவில் ஜட்ஜ்’ (குடிமையியல் நீதிபதி) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. தகுதியுள்ள சட்ட பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
புதிதாக சட்டப்படிப்பு முடித்த 22 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வக்கீலாக பணிபுரிபவர்கள், அரசு உதவி வழக்கறிஞராக இருப்பவர்கள் 25 முதல் 40 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். 1-7-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். அவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். வக்கீல் அல்லது பிளீடரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அல்லது அரசு உதவி வக்கீலாக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணி அறிவிப்புக்கு முந்தைய 3 ஆண்டுகளுக்குள் சட்டம் படித்த புதியவர்கள், பார்கவுன்சிலில் பதிவு செய்து வைத்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே. இவர்கள் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.150 விண்ணப்ப பதிவு கட்டணமாகவும், ரூ.500 தேர்வுக் கட்டணமாகவும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த கட்டண தொகையில் விலக்கு வழங்கப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வு முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. 24-11-2019, அன்று முதல்நிலைத் தேர்வும், வரும் 2020 மார்ச் 28,29-ந் தேதிகளில் முதன்மைத் தேர்வும் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட உடல்தகுதியும் பரிசோதிக்கப்படுகிறது. அதே வேளையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-10-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 11-10-2019-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விமான நிறுவனத்தில் வேலை.
ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களான இதற்கு மொத்தம் 170 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 36 வயதுடையோரும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 38 வயதுடையோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கணினி சார்ந்த டிப்ளமோ படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 28-ந் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு/திறமைத் தேர்வு வருகிற அக்டோபர் 20-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://aiesl.airindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
எல்.ஐ.சி. நிறுவனத்தில் 7,942 உதவியாளர் பணிகள். கடைசி நாள் அக்டோபர் 1
இது பற்றிய விவரம் வருமாறு:-
எல்.ஐ.சி. நிறுவனம் புகழ்பெற்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 942 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மண்டலம் வாரியான பணியிடங்கள் விவரம்: தெற்கு மண்டலம் - 400, வடக்கு மண்டலம் 1544, வடக்கு மத்திய மண்டலம் 1313, கிழக்கு மத்திய மண்டலம் 1497, கிழக்கு மண்டலம் 980, மத்திய மண்டலம் 472, தெற்கு மத்திய மண்டலம் 632, மேற்கு மண்டலம் 1104.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-9-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் களுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.510 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.85 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 1-ந்தேதியாகும். இதற்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 21,22-ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் வெளியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.licindia.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
துணை ராணுவத்தில் 914 கான்ஸ்டபிள் பணிகள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். (CISF) என அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைகளில் ஒன்றான இது மத்திய அரசு நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு பணிகளை கவனிக்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 914 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சமையல்காரர், முடிதிருத்துபவர், சலவைக்காரர், தச்சர், பெயிண்டர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக சமையல்காரர் பணிக்கு 350 பேரும், முடிதிருத்துனர் பணிக்கு 109 பேரும், சலவைக்காரர் பணிக்கு 133 பேரும், சுகாதார தொழிலாளர் பணிக்கு 270 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1996 மற்றும் 1-8-2001 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டி யதில்லை.
தேர்வு செய்யும் முறை
சான்றிதழ் சரிபார்த்தல், உடல்அளவுத்தேர்வு, உடல்திறன் தேர்வு, பணித்திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் வருகிற அக்டோபர் 22-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு சிமெண்டு கழக நிறுவனத்தில் கம்பெனி செகரட்ரி, மேனேஜர், டெக்னிக்கல் எக்சிகியூட்டிவ், சி.சி.ஆர். ஆபரேட்டர் உள்ளிட்ட பணி
- தமிழ்நாடு சிமெண்டு கழக நிறுவனம் சுருக்கமாக டான்செம் (tancem) என்ற அழைக்கப்படுகிறது.
- தற்போது இந்த நிறுவனத்தில் கம்பெனி செகரட்ரி, மேனேஜர், டெக்னிக்கல் எக்சிகியூட்டிவ், சி.சி.ஆர். ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- குறிப்பிட்ட பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் முதுநிலை படிப்புப படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
- அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை http://tancem.com என்ற இணையதளத்தில் படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபா் 1-ந் தேதியாகும்.
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு கப்பல்தளத்தில் 1233 பயிற்சிப் பணிகள்
- கப்பல்தளத்தில் 1233 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம்.
- இந்திய ராணுவத்தின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்தளம் ஒன்று மும்பையில் செயல்படுகிறது.
- தற்போது இந்த கப்பல்தளத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
- டெசினேட்டடு டிரேட்ஸ் பிரிவில் 933 பேரும், நான்-டெசினேட்டடு டிரேட்ஸ் பிரிவில் 300 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.
- இவற்றில் 78 இடங்கள் மட்டும் 2 ஆண்டு பயிற்சியைக் கொண்டதாகும். இந்த பயிற்சிப்பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
- வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-1993 மற்றும் 31-3-2006 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
- கல்வித்தகுதி பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டெய்லர், டூல்மெயின்டனன்ஸ், ஏ.சி. மெக்கானிக், டீசல் மெக்கானிக், பெயிண்டர், பவர் எலக்ட்ரீசியன், பவுண்டரி மேன், பைப் பிட்டர், ஷிப்ரைட், பேட்டன் மேக்கர், கைரோபிட்டர், கியாஸ் டர்பைன் பிட்டர், பாய்லர் மேக்கர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- வருகிற 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
- விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bhartiseva.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
ஸ்டேட் வங்கியில் 477 சிறப்பு அதிகாரி பணி
- ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 477 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- இது பற்றிய விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 477 பேர் தேர்வு செய்யப்படுகிறாா்கள். இதில் அதிகபட்சமாக டெவலப்பர் பிரிவில் 181 இடங்களும், சிஸ்டம் அட்மின், கிளவுட் அட்மின், நெட்ஒர்க் என்ஜினீயர், டெஸ்டர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் உள்ளிட்ட கணினி தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு 100க்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன.
- சீப்மேனேஜர், மேனேஜர் தரத்திலான பணிகளுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன.
- ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
- வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பெரும்பாலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பணிகளில் 40 வயதுடையவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
- வயது வரம்பு 30-6-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
- கல்வித்தகுதி கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சி.இ.சி., எம்.சி.ஏ., எம்.எஸ்சி (ஐ.டி.), எம்.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்) போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 செலுத்தினால் போதுமானது.
- இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 25-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
- இதற்கான ஆன்லைன் தேர்வு அக்டோபர் 24-ந் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கான அனுமதி அட்டை (ஹால்டிக்கெட்) அக்டோபர் 10-ந் தேதிக்குப் பின்னர் பதிவிறக்கம் செய்யலாம்.
- விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணி
- ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு பொதுத்துறை வங்கிகளில் 12 ஆயிரத்து 75 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது.
- பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக “இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு செயல்படுகிறது.
- இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்பு வதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
- தற்போது கிளார்க் பணிகளுக்கான 9-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-9) ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது.
- மொத்தம் 12 ஆயிரத்து 75 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1379 இடங்கள் உள்ளன.
- மாநில வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...
- வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-9-2019-ந் தேதியில் 20 முதல், 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
- கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கணினி இயக்கும் திறனும் அவசியம்.
- தேர்வு செய்யும் முறை: விண்ணப்பிப்பவர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்த தேர்வை அனுமதிக்கும் பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐ.பீ.பி.எஸ். அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.
- கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./ எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படை வீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
- கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.
- விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-10-2019 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : டிசம்பர், 7,8,14 மற்றும் 21
- முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : ஜனவரி 2020 மேலும் விரிவான விவரங்களை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் டெபுடி ரிஜிஸ்திரார், அசிஸ்டன்ட் ரிஜிஸ்திரார், இளநிலை உதவியாளர் மற்றும் ஜூனியர் டெக்னீசியன் பணி
- இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் கீழ் செயல்படுகிறது இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்.). சுரங்கங்களைப் பற்றிய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமான இது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செயல்படுகிறது.
- இந்த கல்வி நிறுவனம் 1926-ல் தோற்றுவிக்கப்பட்டு 4 ஆண்டு சுரங்க தொழில்நுட்ப பட்டப்படிப்புகள், முதுநிலை படிப்புகள், 5 ஆண்டுகள் கொண்ட இன்டகரேட்டடு படிப்புகள், இரட்டை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
- ஆய்வு படிப்புகளையும் மேற்கொள்ளலாம். தற்போது இந்த கல்வி - ஆராய்ச்சி மையத்தில் டெபுடி ரிஜிஸ்திரார், அசிஸ்டன்ட் ரிஜிஸ்திரார், இளநிலை உதவியாளர் மற்றும் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 191 பணியிடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 106 இடங்களும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 74 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டம், மேனேஜ்மென்ட், சி.ஏ. சி.எஸ்., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்கள் டெபுடி ரிஜிஸ்திரார் பணிக்கும், மேனேஜ்மென்ட், நிதி சார்ந்த முதுநிலை படிப்புகளை படித்து குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் உதவி ரிஜிஸ்திரார் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
- ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பும், தட்டச்சுத்திறனும் பெற்றவர்கள் ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கும், குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள்,
- ஐ.டி.ஐ. படிப்புடன் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
- ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது.
- அதிகாரி பணியிடங்களுக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு சேர்க்கப்படு கிறார்கள்.
- விருப்பமுள்ளவா்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 4-11-2019-ந் தேதியாகும்.
- இது பற்றிய விரிவான விவரங்களை www.iitism.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
டாடா நினைவு அறிவியல் மையத்தில் சயின்டிபிக் ஆபீசர், சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணி
- டாடா நினைவு அறிவியல் மையத்தின் கீழ் செயல்படும் மருத்துவ மையங்களில் சயின்டிபிக் ஆபீசர், சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 41 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- முதுநிலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிகளுக்கான முழுமையான தகுதி விவரங்களை https://tmc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 20-ந் தேதியாகும்.
கப்பல் தளத்தில் கப்பல் திட்ட உதவியாளர் பணி
- இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தளங்களில் ஒன்று கேரள மாநிலம் கொச்சியில் செயல் படுகிறது.
- தற்போது இந்த கப்பல் தளத்தில் கப்பல் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 89 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- இந்த வினாக்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20-9-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- செப்டம்பர் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதே நிறுவனத்தில் உதவி பொறியாளர், கணக்காளர், உதவி நிர்வாக அலுவலர் போன்ற அலுவலக பணிகளுக்கு 57 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மெக்கானிக்கல், கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ என்ஜினீயர்கள் உதவி பொறியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- ஐ.டி.ஐ. படித்து குறிப்பிட்ட அனுபவம் பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.காம், சி.ஏ., சி.எம்.ஏ. மற்றும் இதர பட்டப்படிப்புகள் படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன.
- விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- இது பற்றிய விவரங்கள் https://www.cochinshipyard.com என்ற இணைய பக்கத்தில் உள்ளது.
வேளாண் ஆராய்ச்சியாளர் வேலை
- வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியம் சுருக்கமாக ஏ.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது.
- தற்போது இந்த அமைப்பு ரிசர்ச்மேனேஜ்மென்ட் பணிக்காக 72 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
- இது 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாகும்.
- இவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் இயக்குனர், உதவி இயக்குனர், துணை இயக்குனர் தரத்திலான பல்வேறு பிரிவு பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.
- வேளாண் அறிவியல் மற்றும் உணவு, தாவரவியல், உயிரியல், சுற்றுச்சூழல் சார்ந்த முதுநிலை அறிவியல் படிப்புகள், முனைவர் ஆராய்ச்சிப்பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
- குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விண்ணப்பதாரர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- அந்தந்த பணிக்கான கல்வித் தகுதி, அனுபவ விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 26-ந் தேதியாகும். ரூ.1500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
- இது பற்றிய விவரங்களை http://asrb.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
திருச்சியில் பயிற்சிப் பணி
- திருச்சியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 74 இடங்களும், பட்டதாரிகளுக்கு 12 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மெக்கானிக், ஆட்டோமொபைல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்களும், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
- இதற்கான நேர்காணல் செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற உள்ளது.
- இது பற்றிய கூடுதல் விவரங்களை http://boat-srp.com என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு செல்லவும்.
தமிழக சுகாதார துறையில் 405 மருந்தாளுனர் பணி
- தமிழக சுகாதார துறையில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கு 405 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ‘ஆயுஸ் கிளினிக்’குகளில் பார்மஸி படித்தவர்களை ‘டிஸ்பென்சர்’ பணியில் நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 405 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இவை பகுதி நேர பணியிடங்களாகும்.
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும் 57 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
- சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவ பிரிவுகளில் பார்மஸி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் 20 சதவீதமாகவும், மேல்நிலை படிப்பு மதிப்பெண்கள் 30 சதவீதமாகவும், பார்மஸி படிப்பு மதிப்பெண்கள் 50 சதவீதத்திற்கும் கணக்கிடப்பட்டு மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
- இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106” என்ற முகவரியை வருகிற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.tnhealth.org என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணி
- மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மத்திய அரசு துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) அமைப்பு நிரப்பி வருகிறது.
- தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், ஜூனியர் டிரான்ஸ்லேட்டர், சீனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர் மற்றும் இந்தி பிரத்யாபக் போன்ற பணிகளுக்கான தேர்வு-2019 அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த தேர்வின் மூலம் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.
- இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
- வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-1-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
- கல்வித்தகுதி மொழி சார்ந்த பாடங்களில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், பட்டப்படிப்புடன், மொழி பெயர்ப்பு டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், மொழி பெயர்ப்பு பணியில் அனுபவம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
- விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 26-9-2019-ந் தேதியாகும்.
- வங்கி வழியாக கட்டணம் செலுத்த கடைசிநாள் 28-9-2019-ந் தேதியாகும்.
- இதற்கான கணினி அடிப்படையிலான (தாள்1) தேர்வு 26-11-2019 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 2-ம் தாள் தேர்வு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும்.
- இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மத்திய கூட்டுறவு வங்கிகளின் தமிழக கிளைகளில் 963 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மத்திய கூட்டுறவு வங்கிகளின் தமிழக கிளைகளில் 963 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- மத்திய அரசின் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த வங்கிகளில் அசிஸ்டன்ட் (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க அவகாசம் உள்ள காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
- மொத்தம் 963 இடங்கள் உள்ளன. வங்கி வாரியான பணியிட விவரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி - 238, தர்மபுரி கூட்டுறவு வங்கி - 119, கிருஷ்ணகிரி கூட்டுறவு வங்கி - 50, மதுரை கூட்டுறவு வங்கி - 79, திருப்பூர் கூட்டுறவு வங்கி - 68, தஞ்சாவூர் கூட்டுறவு வங்கி - 163, கன்னியாகுமரி - 40, திருநெல்வேலி - 70, பெரம்பலூர்- 21, வேலூர்- 60, விருதுநகர் - 55.
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்.
- வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
- பொதுப்பிரிவு முன்னாள் ராணுவ வீரர்கள் 48 வயதுடையோரும், மாற்றுத்திறனாளிகள் 40 வயதுடையோரும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- இவர்கள் பட்டப்படிப்பை இடைவிடாமல் (10+2+3 என்ற ஆண்டு வரிசையில்) தொடர்ச்சியாக படித்துமுடித்திருக்க வேண்டும்.
- கணினி அறிவு அவசியம், தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். கட்டணம் பொதுப் பிரிவு மற்றும் எம்.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விதவைகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
- தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு வங்கிக்கும் விண்ணப்ப அவகாச காலம் மாறுபடுகிறது.
- தர்மபுரி, காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி காலியிடங்களுக்கு வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- விருதுநகர் கூட்டுறவு வங்கி பணிக்கு செப்டம்பர் 6-ந் தேதிக்குள்ளும், திருநெல்வேலி மாவட்ட காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதிக்குள்ளும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
- திருப்பூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்ட காலிப்பணி களுக்கு செப்டம்பர் 13-ந் தேதியும், கன்னியாகுமரி பணிகளுக்கு 11-ந்தேதியும் விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
- வேலூர் மாவட்ட பணிகளுக்கு செப்டம்பர் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கங்களை பார்க்கவும்.
மத்திய நிறுவனத்தில் பயிற்சிப்பணி
- மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (எச்.சி.எல்.). செம்புத்தாது நிறுவனமான இதில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பிட்டர், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன், டிராட்ஸ்மேன், மெக்கானிக், பம்ப் ஆபரேட்டர், மெக்கானிக், வயர்மேன், ஸ்டெனோகிராபர், லேப் அசிஸ்டன்ட், கார்பென்டர், சர்வேயர் போன்ற பிரிவில் பயிற்சிப் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- டிப்ளமோ என்ஜினீயர்கள், பி.இ. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
- விண்ணபதாரர்கள் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- செப்டம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.hindustancopper.com/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
எய்ம்ஸ் கிளையில் உதவி பேராசிரியர் பணி
- நாக்பூர் எய்ம்ஸ் கிளையில் உதவி பேராசிரியர் பணிக்கு 29 பேரும், இணை பேராசிரியர் பணிக்கு 8 பேரும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 6 பேரும், பேராசிரியர் பணிக்கு 7 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- மொத்தம் 22 மருத்துவ பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. 50 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், விரிவான விவரங்களை www.aiimsnagpur.edu.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- செப்டம்பர் 17-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
- ரிஷிகேஷ் ரிஷிகேஷ் கிளையில் 43 பணியிடங்கள் உள்ளன. முதுநிலை மருத்துவம் படித்தவர்கள், குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அக்டோபர் 25-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- இது பற்றிய விவரங்களை https://www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
கப்பல் தளங்களில் நான்எக்சிகியூட்டிவ் தரத்திலான அலுவலக பணி
- கப்பல் தளத்தில் 1980 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- பொதுத்துறை கப்பல் தளங்களில் ஒன்று மசாகான்டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட். மும்பையில் செயல்படும் இந்த கப்பல் தளத்தில் தற்போது நான்எக்சிகியூட்டிவ் தரத்திலான அலுவலக பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 1980 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- பிட்டர், கார்பெண்டர், மெக்கானிக், அட்டன்ட், கிரேன் ஆபரேட்டர், வெல்டர், ஜூனியர் பிளானர், கேஸ் கட்டர், பெயிண்டர், பைப் பிட்டர், ஸ்டோர் கீப்பர், யூட்டிலிட்டி ஹேண்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவில் பணிகள் உள்ளன. அதிகபட்சமாக பைப்பிட்டர் பணிக்கு 231 இடங்களும், ஸட்ரக்சரல் பேப்ரிகேட்டர் பணிக்கு 374 இடங்களும், கேஸ் கட்டர் பணிக்கு 100 இடங்களும், பிட்டர் பணிக்கு 254 இடங்களும், எலக்ட்ரானிக் மெக்கானிக் பணிக்கு 98 இடங்களும், கார்பெண்டர் பணிக்கு 78 இடங்களும் உள்ளன.
- அந்தந்த பணிக்கான முழுமையான காலியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
- வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-8-2019ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 38 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
- கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, என்.ஏ.சி. பணிப்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன.
- கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
- விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 5ந் தேதியாகும்.
- இதற்கான ஆன்லைன் தேர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 23-ந் தேதி வெளியாகும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://mazagondock.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணி
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது.
- மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு மட்டும் 89 காலியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
- ஹோம்சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மென்ட், புட் அண்ட் நியூட்ரிசியன், சோசியல் ஒர்க், ரெகபில்லிடேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- நியூட்ரீசியன், ஹோம்சயின்ஸ் பட்டப்படிப்புடன், ரூரல் சர்வீஸ் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- இணையதளம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் செப்டம்பர் 11-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 16,17-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
- விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
அனல்மின் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
- இந்தியாவின் மிகப்பெரிய மின்நிறுவனமாக திகழ்கிறது தேசிய அனல்மின் நிறுவனம் (என்.டி.பி.சி.). மொத்தம் 55 ஆயிரத்து 786 மெகாவாட் திறன் கொண்டது.
- இது நாட்டின் மின் தேவையில் நான்கில் ஒரு பங்கை உற்பத்தி செய்கிறது.
- 2032-ம் ஆண்டிற்குள் 130 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் நோக்குடன் மின் உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இது 14-வது இடம் வகிக்கிறது.
- தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர்கள் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 203 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவு வாரியாக எலக்ட்ரிக்கல் பிரிவில் 75 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 76 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 26 பேரும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 26 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 102 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 56 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 30 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 15 இடங்களும் உள்ளன.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள், அவை சார்ந்த பாடப்பிரிவுகளில் படித்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- 3 ஆண்டு பணி அனுபவம் அவசியமாகும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
- இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 26-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ntpccareers.net என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
NABARD BANK RECRUITMENT 2019 | NABARD BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்ஸ் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82+9 . விளம்பர அறிவிப்பு நாள் : 09.09.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.10.2019.
- NABARD BANK RECRUITMENT 2019 | NABARD BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்ஸ் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82+9 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 09.09.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.10.2019.
- இணைய முகவரி : https://www.nabard.org/
NHIDCL RECRUITMENT 2019 | NHIDCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : லோகோ ஆபரேட்டர், ஸ்டோர் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட், லோகோ அட்டன்ட் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 41 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.09.2019.
- NHIDCL RECRUITMENT 2019 | NHIDCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : லோகோ ஆபரேட்டர், ஸ்டோர் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட், லோகோ அட்டன்ட் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 41 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.09.2019.
- இணைய முகவரி : https://www.nationalfertilizers.com
AIR INDIA RECRUITMENT 2019 | AIR INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 355 . நேர்காணல் நடைபெற உள்ள நாள் : ஆகஸ்டு 26 முதல் செப்டம்பர் 24-ந் தேதி வரை .
- AIR INDIA RECRUITMENT 2019 | AIR INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஏர்கிராப்ட் டெக்னீசியன் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 355 .
- நேர்காணல் நடைபெற உள்ள நாள் : ஆகஸ்டு 26 முதல் செப்டம்பர் 24-ந் தேதி வரை .
- இணைய முகவரி : http://aiesl.airindia.in/
NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி :எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், துணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, உதவி நூலகர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21+11 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.09.2019 .
- NIT RECRUITMENT 2019 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி :எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், துணை பதிவாளர், மருத்துவ அதிகாரி, உதவி நூலகர் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21+11 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.09.2019 .
- இணைய முகவரி : http://nituk.ac.in
DAVP RECRUITMENT 2019 | DAVP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : டாக்ஸ் அசிஸ்டன்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 20 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.09.2019.
- DAVP RECRUITMENT 2019 | DAVP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : டாக்ஸ் அசிஸ்டன்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 20 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.09.2019.
- இணைய முகவரி : http://www.davp.nic.in/