எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணிகளுக்கு 255 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது ரிஷிகேஷில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவ கிளை மையத்தில் மருத்துவ அதிகாரி, துணை மருத்துவ கண்காணிப்பாளர், பிளட் டிரான்ஸ்பியூசன் ஆபீஸர் உள்ளிட்ட 30 விதமான பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 255 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை கற்பித்தல் சாராத பணியிடங்களாகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகள் படித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.ஏ., எம்.எஸ்சி. படித்தவர்களுக்கும், இதர பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பி.எஸ்சி. நர்சிங், பிளஸ்-2 படிப்புடன் துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள் லேப் டெக்னீசியன் பணிக்கும், 10-ம்வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. அதிகாரி பணியிடங்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், இதர பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை http://aiimsrishikesh.edu.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 255 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-6-2019.
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் கற்பித்தல் சாராத அலுவலக பணிகளுக்கு 255 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது ரிஷிகேஷில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவ கிளை மையத்தில் மருத்துவ அதிகாரி, துணை மருத்துவ கண்காணிப்பாளர், பிளட் டிரான்ஸ்பியூசன் ஆபீஸர் உள்ளிட்ட 30 விதமான பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 255 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை கற்பித்தல் சாராத பணியிடங்களாகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகள் படித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.ஏ., எம்.எஸ்சி. படித்தவர்களுக்கும், இதர பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பி.எஸ்சி. நர்சிங், பிளஸ்-2 படிப்புடன் துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள் லேப் டெக்னீசியன் பணிக்கும், 10-ம்வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. அதிகாரி பணியிடங்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், இதர பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை http://aiimsrishikesh.edu.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
AIRINDIA RECRUITMENT 2019 | AIRINDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரெயினி பிளைட் டிஸ்பேட்ஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 070 | நேர்காணல் நாள் : மே மாதம் 6 முதல் .
இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர்இந்தியாவில் டிரெயினி பிளைட் டிஸ்பேட்ஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சீனியர் டிரெயினி பிளைட் டிஸ்பேட்ஜர் பணிக்கு 63 வயதுக்கு உட்பட்டவர்களும், ஜூனியர் டிரெயினி பிளைட் டிஸ்பேட்ஜர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இயற்பியல், கணிதம் அடங்கிய பாடப்பிரிவில் இவர்கள் படித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.1000 கட்டணத்தை டி.டி. எடுத்து, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். தேவையான சான்றுகள் அசல் மற்றும் நகல்களை உடன் எடுத்துச் செல்வது அவசியம். மே மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. 6-ந் தேதி புது டெல்லியிலும், 9-ந்தேதி மும்பையிலும் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.airindia.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விருப்பமுள்ளவர்கள் நேர்காணலுக்கு செல்லலாம்.
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமாண்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 323 | விண்ணப்பம் தொடக்கம் : 20-5-2019.
துணை ராணுவ படைகளில் உதவி கமாண்டன்ட் பணி 323 பேர் சேர்ப்பு துணை ராணுவ படைகளில் உதவி கமாண்டன்ட் பணிக்கு 323 பேரை சேர்ப்பதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அரசின் பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமித்து வருகிறது. தற்போது மத்திய ஆயுதப்படை பிரிவுகளான துணை ராணுவ படைகளில் உதவி கமாண்டண்ட் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஏ.சி. எக்ஸாம் 2019 அறிவிப்பை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டு உள்ளது. மொத்தம் 323 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். படைப்பிரிவு வாரியாக பி.எஸ்.எப். பிரிவில் 100 இடங்களும், சி.ஆர்.பி.எப். பிரிவில் 108 இடங்களும், சி.ஐ.எஸ்.எப். பிரிவில் 28 இடங்களும், ஐ.டி.பி.பி. பிரிவில் 21 இடங்களும், எஸ்.எஸ்.பி. பிரிவில் 66 இடங்களும் உள்ளன. ஆண்-பெண் இருபாலருக்கும் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1994 மற்றும் 1-8-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வு, நேர் காணல் மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள். உடல் தகுதி விண்ணப்பதாரர் ஆண்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) 81 செ.மீ. மற்றும் 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறனும், எடையும் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்கிறதா? என பரிசோதிக்கப்படும். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.200 மற்றும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-5-2019-ந் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு 18-8-2019-ந் தேதி நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 040 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-5-2019.
ராணுவத்தில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 130-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவுத் திட்டத்தில் (டி.ஜி.சி.-130, ஜன2020) பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த பயிற்சி நுழைவில் 40 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-1993 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித் தகுதி: பி.இ, பி.டெக். பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு டேராடூன் ராணுவ அகாடமியில் ஒராண்டு பயிற்சி வழங்கப்படும். இது 18 நிலை வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கொண்ட பணிவாய்ப்பாகும். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 9-5-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : ... | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-5-2019.
மத்திய அரசு துறைகளில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கான ‘குரூப்-சி’ பணிகள் மத்திய அரசு துறைகளில் 10-ம் வகுப்பு படித்தவர்களை மல்டி டாஸ்கிங் ஸ்டாப் கீழ்நிலை பணியிடங்களில் நியமிக்கும் எஸ்.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (குரூப்-சி) பணியிடங்களை நிரப்பு வதற்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மல்டி டாஸ்கிங் (நான் டெக்னிக்கல்) தேர்வு-2019 மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணிகளுக்கான காலியிட விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இனி பார்க்கலாம்.... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயதினை கடந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1992 மற்றும் 1-8-2001-ந்தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். சில பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை: விண்ணப்பித்தவர்கள் கணினித் தேர்வுக்கு உட் படுத்தப்படுவார்கள். தாள்1, தாள் 2 என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். இ,தில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம்: விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவவீரர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பார்ட்-1 மற்றும் பார்ட்-2 ஆகிய இரு நிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான கணினி தேர்வு (முதல்நிலை-1) 2-8-2019 முதல் 6-9-2019 வரை குறிப்பிட்ட நாட்களில் நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு நவம்பர் 17-ந் தேதி நடக்கிறது. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 29-5-2019-ந் தேதியாகும். மேலும் விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி நீர்நிலயியல் நிபுணர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 51 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.05.2019.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., உதவி நீர்நிலயியல் நிபுணர் மற்றும் இயக்குனர் பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 51 பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பாடங்களில் எம்.எஸ்சி., எம்.டெக் படித்தவர்கள் நீர் நிலயியல் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை சட்டப்படிப்பு படித்தவர்கள் இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நீர்நில இயல் நிபுணர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும், இயக்குனர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி மே 2-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ENGINEERS INDIA RECRUITMENT 2019 | ENGINEERS INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 96 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2019.
என்ஜினீயர் இந்தியா நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் பணிக்கு 96 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 52 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக், பி.எஸ்சி என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.engineersindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 039 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.05.2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டிரக்ஸ் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் பணிக்கு 40 பேரும், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப் படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பார்மசி, பார்மசூட்டிகல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி மற்றும் குறிப்பிட்ட பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மே 12-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 23-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 195 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-5-2019.
மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம் சுருக்கமாக எம்.ஆர்.பி.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 195 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரி பயிற்சி பணிக்கு 87 இடங்களும், டெக்னீசியன் பயிற்சிப்பணிக்கு 108 இடங்களும் உள்ளன. குறிப்பிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 17-5-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.mrpl.co.in/ என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களைப் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் டிரெயினி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 145 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.05.2019.
பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் செயல்படுகிறது. 2017-2018-ம் நிதியாண்டில் 27 ஆயிரத்து 850 கோடி விற்று முதல் ஈட்டிய முன்னணி நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெயினி, எக்சி கியூட்டிவ் டிரெயினி போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், எச்.ஆர். மற்றும் நிதி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 145 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பணியிட விவரத்தை இணைய தளத்தில் பார்க்கலாம். என்ஜினீயர் டிரெயினி பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுநிலை என்ஜினீயரிங் படித்திருந்தால் 29 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு 29 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனு மதிக்கப்படும். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் போன்ற பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் இவை தொடர்பான என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள், என்ஜினீயர் டிரெயினி பணிக்கு விண்ணப்பிக்கலாம். எச்.ஆர். முதுநிலை படிப்பு அல்லது முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மே 6-ந் தேதியாகும். இதற்கான தேர்வு மே 25, 26-ந் தேதிகளில் நடைபெறும். இது பற்றிய விவரங்களை https://careers.bhel.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
AIRINDIA RECRUITMENT 2019 | AIRINDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கண்ட்ரோலர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 205 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2019. இணைய முகவரி : www.airindia.in
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட். (AIATSL). தற்போது இந்த நிறு வனத்தில் டெபுட்டி டெர்மினல் மேனேஜர், கஸ்டமர் ஏஜென்ட், ராம்ப் சர்வீஸ் ஏஜென்ட், யூடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கஸ்டமர் ஏஜென்ட் பணிக்கு மட்டும் 100 இடங்களும், யூடிலிட்டி ஏஜென்ட் பணிக்கு 60 இடங்களும், ராம்ப் சர்வீஸ் ஏஜென்ட் பணிக்கு 25 இடங்களும் உள்ளன. நேரடி நேர்காணல் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணிகள் உள்ளன. மேலாளர் தரத்திலான பணிகளுக்கு 55 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., எச்.ஆர்., மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் கஸ்டமர் ஏஜென்ட் மற்றும் இதர ஏஜென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணத்திற்கு டி.டி. எடுத்து தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் ஆஜர் ஆகலாம். ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நாளில் நேர்காணல் நடக்கிறது. ஏப்ரல் 24-ந் தேதி முதல், மே7-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. எந்த பணிக்கு எந்த நாளில் நேர்காணல் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு நேரில் செல்லவும். ஏர் இந்தியா ஏர் இந்தியா நிறுவனத்திலும் நேர் காணல் அடிப்படையில் டிரெயினி கண்ட்ரோலர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மட்டும் 54 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிரெயினி கண்ட்ரோலர் பணிக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 42 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பி.இ., பி.டெக் படித்தவர்கள் டிரெயினி கண்ட்ரோலர் பணிக்கும், பட்டப்படிப்பு படித்தவர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் ரூ.500 கட்டண டி.டி. மற்றும் தேவையான சான்றுகளுடன் நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். டிரெயினி கண்ட்ரோலர் பணிக்கு ஏப்ரல் 30-ந் தேதியும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மே 2-ந் தேதியும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விவரங்களை http://www.airindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : படை வீரர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | ஆள்சேர்க்கை முகாம் ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை இணைய முகவரி : www.joinindianarmy.nic.in
நெய்வேலியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நெய்வேலியில் ராணுவத்துக்கு நேரடி ஆள்சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- படை வீரர் (தொழில்நுட்பம்), படைவீரர் (விண்வெளி, ஆயுதப் பொருள் பரிசோதகர்), செவிலியர் உதவியாளர், படைவீரர் (கிளார்க்), ஸ்டோர் கீப்பர், பொது சேவை போன்ற பிரிவில் ராணுவ ஆள்சேர்க்கை முகாம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடக்க இருக்கிறது. கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த ஆள்சேர்க்கை முகாமில் பங்கெடுக்கலாம். பிளஸ்-2 படித்தவர்கள் படைவீரர் (தொழில்நுட்பம்), செவிலியர் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளர் மற்றும் பொது சேவை பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 17½ வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொதுப் பணிக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படு கிறார்கள். விண்ணப்பதாரர் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற மே 18-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மே 21-ந் தேதி முதல் இணையதளம் வழியாக நுழைவு அட்டை பெற்றுக்கொண்டு, ஆள்சேர்க்கை முகாமில் கலந்துகொள்ளலாம். அப்போது நுழைவு அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஒருவர் எந்த நாளில் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்பது நுழைவு அட்டையில் (அட்மிட் கார்டு) குறிப்பிடப்படும். ஆள்சேர்க்கை முகாம் ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை, நெய்வேலி பாரதி மைதானத்தில் நடைபெறும். ஆவணங்கள் பரிசோதனை, உடல் தகுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் செய்யலாம்.
BANK RECRUITMENT 2019 | BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 92 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.04.2019. இணைய முகவரி : www.allahabad bank.in
வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை அலகாபாத் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத்துறை வங்கிகளில் ஒன்று அலகாபாத் வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். செக்யூரிட்டி அதிகாரி, சிவில் என்ஜினீயர், மேனேஜர் (பயர் சேப்டி, சட்டம், ஐ.டி., செக்யூரிட்டி, சிஸ்டம் அட்மின், பிக் டேட்டா அனலைட்டிக்ஸ், மியூச்சுவல் பண்ட்), நிதி ஆய்வாளர், கம்பெனி செகரட்ரி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.பி.இ., பி.டெக்., சட்டப்படிப்பு, ஏ.சி.எஸ்., சி.எப்.ஏ., ஐ.சி.டபுள்.ஏ., எம்.பி.ஏ., சி.எம்.ஏ. மற்றும் முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 29-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூன் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.allahabad bank.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
BSF RECRUITMENT 2019 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1072 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2019 இணைய முகவரி : www.bsf.nic.in/recruitment .
எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 1072 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு : துணை ராணுவ படைகளில் ஒன்று பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைக் காவல் படை. சுருக்கமாக பி.எஸ்.எப். என அழைக்கப்படும் இந்த படைப்பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. தற்போது பி.எஸ்.எப். அமைப்பின் தலைமை இயக்குனரகத்தில் இருந்து ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை ‘குரூப்-சி’ பிரிவின் கீழ் வரும் தற்காலிக பணியிடங்களாகும். ரேடியோ ஆபரேட்டர் பிரிவில் 300 இடங்களும், ரேடியோ மெக்கானிக் பிரிவில் 772 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் பணியிடங்கள் தொடர்பான பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், அல்லது அறிவியல் பாடங்களை அடக்கிய பிரிவில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்ப தாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு மே 14-ந் தேதி தொடங்குகிறது. ஜூன் 12-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு, உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான தேர்வு முறைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in/recruitment என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சார்ஜ்மேன் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 172 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.04.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 172 காலியிடங்கள் இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் பணிக்கு 172 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு- இந்திய கடற்படை ராணுவத்தின் முப்பிரிவுகளில் ஒன்றாகும். இந்த படைப்பிரிவில் ஏராளமான பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மெக்கானிக்கல் பிரிவில் 103 பேரும், எக்ஸ்புளோசிவ் பிரிவில் 69 இடங்களும் உள்ளன. ‘குரூப்-பி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணியிடங்கள் நான்-கெசட்டடு தரத்திலானவை. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 28-4-2019-ந் தேதியில் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், புரொடக்சன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் சார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கெமிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ முடித்து குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் எக்ஸ்புளோசிவ் பிரிவு பணியில் சேரலாம். கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்வுநாள் இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 28-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.joinindiannavy.gov.in மற்றும் www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
IGCAR RECRUITMENT 2019 | IGCAR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 130 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2019. இணைய முகவரி : www.igcar.gov.in
கல்பாக்கம் அணுசக்தி மையத்தில் பயிற்சிப்பணி இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம் கல்பாக்கத்தில் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 130 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், டூல் மெயின்டனன்ஸ், பிளம்பர், புக் பைண்டர், மாசன், சிஸ்டம் அசிஸ்டன்ட் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிப்பிரிவில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்.டி.ஏ. சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 24-4-2019-ந் தேதியில் 16 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 24-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.igcar.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
TNPCB RECRUITMENT 2019 | TNPCB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 224 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2019. இணைய முகவரி : www.tnpcb.gov.in
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர் வேலை 224 காலியிடங்கள் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி என்ஜினீயர், சுற்றுச்சூழல் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), சுற்றுச்சூழல் பற்றிய பல்வேறு ஆய்வுகளிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பங்களிப்பு செய்கிறது. புதிய நிறுவனங்கள், திட்டங்களை செயல்படுத்தும்போது சுற்றுச்சூழலில் தாக்கம் ஏற்படுமா? என்பதை இந்த அமைப்பு ஆய்வு செய்கிறது. அதற்கான சான்றிதழையும் வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் உதவி என்ஜினீயர், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர், உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணி வாரியான காலியிட விவரம் : உதவி என்ஜினீயர் - 73, ஆராய்ச்சியாளர் - 60, உதவியாளர் - 36, டைப்பிஸ்ட் - 55 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு இந்த பணிகளுக்கு 1-1-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் உதவி என்ஜினீயர் மற்றும் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் சார்ந்த அறிவியல் படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் உதவி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதர பட்டதாரிகள் உதவியாளர் பணிகளுக்கும், பட்டப்படிப்புடன் உயர்நிலை தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். கட்டணம் ஓ.சி., பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவைப் பெண்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpcb.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 785 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019. இணைய முகவரி : www.ongcindia.com
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 785 வேலைவாய்ப்புகள் என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 785 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ONGC) என அழைக்கப்படுகிறது. மகாரத்னா அந்தஸ்து பெற்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் ‘கேட் -2019’ தேர்வு அடிப்படையில் ஏராளமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 785 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக காலியிட விவரம் : ஏ.இ.இ. 550, கெமிஸ்ட் - 67, ஜியாலஜிஸ்ட் - 68, ஜியோபிசிக்ஸ்ட் - 43, மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் ஆபீசர் - 33, புரோகிராமிங் ஆபீசர் - 13, டிரான்ஸ்போர்ட் ஆபீசர் - 11 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஏ.இ.இ. பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி என்ஜினீயரிங் பட்டப் படிப்புகள், முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏ.இ.இ. பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை வேதியியல், ஜியாலஜி மற்றும் அவை தொடர்பான முதுநிலை படிப்புகள், பி.இ. படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றம் மாற்றுத்திறனாளிகள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.370 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 25-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்த பணிக்கான நேர்காணல் 10-6-2019-ந் தேதி நடைபெறுகிறது. கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.ongcindia.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 965 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.05.2019. இணைய முகவரி : www.upsc.gov.in
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in
IDBI RECRUITMENT 2019 | IDBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 920 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019.
NAMAKKAL COURT RECRUITMENT 2019 | NAMAKKAL COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 057 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.04.2019.
NITRKL RECRUITMENT 2019 | NITRKL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 47 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2019.
NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் டிரெயினி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.04.2019.
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.04.2019.
ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாகும். ஏராளமான கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கியில், புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 810 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவின ருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 200 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 21 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 22-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஹால் டிக்கெட்டுகள் மே மாதம் 3-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்யலாம். முதல்நிலை ஆன்லைன் தேர்வு, வருகிற ஜூன் 8,9,15,16-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு ஜூலை மாதம் 20-ந்தேதி நடத்தப்படுகிறது. நேர்காணல் செப்டம்பர் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 069 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.04.2019.
எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங் களுக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என அழைக்கப் படுகிறது. இதன் மருத்துவமனை- கல்லூரிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது பல்வேறு எய்ம்ஸ் மையங்களில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் கிளையில் இந்த பணிகளுக்கு 69 இடங்கள் உள்ளன. அனஸ்தீசியாலஜி, டெர்மடாலஜி, இ.என்.டி., ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, ஆப்தமாலஜி, ஆர்தோபெடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பிசியாலஜி, பல்மோனரி மெடிசின், ரேடியோ டயக்னாஜிஸ், ரேடியோ தெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை ஏப்ரல் 15-ந் தேதி முதல் நிரப்பி அனுப்பலாம். 30-5-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். 7-2-2018-ல் அறிவிப்பு வெளியான 24 பணியிடங்களுக்கு மட்டும் சில மாறுதல்களுடன் மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்துவிட்டு தகுதியானவர்கள், 30-4-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.aiimsmangalagiri.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். கோரக்பூர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் எய்ம்ஸ் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிவாரியான விவரம் : பேராசிரியர் - 8 இடங்கள், கூடுதல் பேராசிரியர் - 10 இடங்கள், இணை பேராசிரியர் - 11 இடங்கள், உதவி பேராசிரியர் - 14 இடங்களும் உள்ளன. அனட்டாமி, பயோகெமிஸ்ட்ரி, பிஸியாலஜி, ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, கைனகாலஜி, இ.என்.டி., டெர்மடாலஜி, ரேடியோ டயக்னாசிஸ், சைகியாட்ரி, ஆர்தோபெடிக்ஸ் உள்ளிட்ட 13 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பாடங்களில் முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய அறிவிப்பு 22-3-2019 தேதியில் வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsjodhpur.edu.in/aiimsgorakhpur என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம். ஜோத்பூரில் 139 பணிகள் இதேபோல ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் குரூப்-ஏ, தரத்திலான பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓய்வு பெற்றவர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் குறிப்பிட்ட இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 41 மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இதில் பேராசிரியர் பணிக்கு 36 இடங்களும், கூடுதல் பேராசிரியர் பணிக்கு 31 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 44 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 28 இடங்களும் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கும், மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. ஓய்வு பெற்றவர்களுக்கான பணியிடங் களுக்கு 70 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணியிடங்களில் 58 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்த கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Website: http://www.aiimsjodhpur.edu.in/ என்ற இணைய தளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-4-2019-ந் தேதியாகும்.
SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.04.2019.
பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி அதிகாரி பதவியில் 2 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இத் தேர்வுக்கு ஏப்ரல் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பயிற்சி அதிகாரி பதவியில் 2 ஆயிரம் காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலைத் தேர்வு (ஆன்லைன் வழி) ஜூன் 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தகுதியுடையவர்கள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு முதன்மை தேர்வு (ஆன்லைன் வழி) ஜூலை 20-ம் தேதி நடத்தப்படும். அதன் முடிவுகள் ஆகஸ்ட் 3-வது வாரத்தில் வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் குழு விவாதம் மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி தேர்வு முடிவுகள் அக்டோபர் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.