Ad Code

ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 496 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019.

ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 496 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019. இணைய முகவரி : www.job.kalvisolai.com
ஐ.டி.பீ.பி. துணை ராணுவ படையில் 496 மருத்துவ அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. (ITBP) என அழைக்கப் படுகிறது. துணை ராணுவ படைகளில் ஒன்றான இந்த படைப்பிரிவில் தற்போது சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர், ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர், மெடிக்கல் ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 496 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் தரத்திலான மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 317 இடங்களும், டெபுடி கமாண்டன்ட் தரத்திலான ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 175 இடங்களும், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி (சீனியர் கமாண்டன்ட்) பணிக்கு 4 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், மருத்துவ அதிகாரி பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-5-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். கல்வித்தகுதி அலோபதி மருத்துவம் படித்தவர்கள் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம், பணி அனுபவம் அவசியம். முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புடன் குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் இதர பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண்கள் ரூ.400 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு நாளை (2-ந் தேதி) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசிநாள் மே 1-ந் தேதியாகும். விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code