- EPFINDIA RECRUITMENT 2019 | EPFINDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : உதவியாளர் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 280
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-6-2019
- இணைய முகவரி : www.epfindia.gov.in
மத்திய நிதி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 280 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- பிராவிடன்ட் பண்ட் எனப்படும் ஊழியர்கள் வருவாய் நிதி கழக நிறுவனம் சுருக்கமாக இ.பி.எப்.ஓ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மத்திய அரசு நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 280 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 25-6-2019-ந் தேதியில் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25-6-2019-ந் தேதியாகும். ஜூலை 10-ந் தேதிக்குள் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுக்கலாம். இதற்கான முதல்நிலைத் தேர்வு (பேஸ்-1) ஜூலை 30,31-ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வு (பேஸ்-2) தேதி முதல்நிலைத் தேர்வு முடிவுக்குப் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment