Ad Code

INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மாலுமி பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2700 . விளம்பர அறிவிப்பு நாள் : 28-6-2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.

  • INDIAN NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : மாலுமி பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2700 .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 28-6-2019.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-7-2019.
  • இணைய முகவரி : https://www.joinindiannavy.gov.in

கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 2700 பேர் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். - பிப்ரவரி 2020) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 2200 பேரும், செய்லர் (ஏ.ஏ. - பிப்ரவரி 2020) என்ற பயிற்சிப் பிரிவில் 500 பேரையும் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 700 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிளஸ்-2 படித்தவர்களை இந்த பயிற்சியில் சேர்த்து மாலுமியாக பயிற்சியளித்து பணியமர்த்திக் கொள்கிறார்கள். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் இனி பார்ப்போம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-2-2000 மற்றும் 31-1-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:
மேல்நிலைக் கல்வி (10+2 முறையில்) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், இந்த பாடங்களில் 60 சதவீதத்திற்கு குறைவில்லாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

உடல் தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 28-6-2019-ந் தேதி
விண்ணப்பிக்க கடைசிநாள் : 10-7-2019

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindiannavy.gov.in

Post a Comment

0 Comments

Comments

Ad Code