Ad Code

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.) 976 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் !

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.) 976 ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் !

இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.) ஜூனியர் எக்சிகியூட்டிவ் (Junior Executive) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 976 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பதவி விவரங்கள்:
  • ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஆர்க்கிடெக்சர்): 11
  • ஜூனியர் எக்சிகியூட்டிவ் (சிவில்): 199
  • ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலெக்ட்ரிக்கல்): 208
  • ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலெக்ட்ரானிக்ஸ்): 527
  • ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஐ.டி.): 31
கல்வித் தகுதி:

பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ. படித்தவர்கள் மற்றும் கேட் (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

27-09-2025 அன்று நிலவரப்படி 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின்படி, மாற்றுத்திறனாளிகள் உட்பட 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை:

2023, 2024, 2025 ஆம் ஆண்டு கேட் தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-09-2025

மேலும் விவரங்களுக்கு:

அதிகாரப்பூர்வ இணையதளம்: ttps://www.aai.aero/

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Comments

Ad Code