முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும்.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.தற்போது இந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள குரூப் ஏ அதிகாரி மற்றும் குரூப் பி அலுவலக உதவியாளர்(பல்நோக்கு) பணியிடங்களை நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி விவரம் மற்றும் இந்தத் தேர்வில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள், வயதுவரம்பு பற்றிய விவரங்களை அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தனித்தனியே பார்க்கலாம்.
பணி மற்றும் தகுதி விவரங்கள்:
பணி: Office Assistant (Multipurpose) - 3688
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் வங்கி அமைந்துள்ள மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale I - 3381
பணி: Officer Scale II (Agriculture Officer) - 106
பணி: Officer Scale II (General Banking Officer) - 693
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. கணினி குறித்தும் படித்திருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 18 - 30, 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale II (Marketing Officer) - 45
பணி: Officer Scale II (Treasury Manager) - 11
பணி: Officer Scale II (Law) - 19
பணி: Officer Scale II (CA) - 24
பணி: Officer Scale II (IT) - 76
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Electronics, Communication, Computer Science, Information Technology போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது CA அல்லது MBA (சந்தையியல், நிதி) முடித்திருக்க வேண்டும். அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது விவசாயம், கால்நடை அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Officer Scale III - 157
தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Information Technology, Management, Law, Economics and Accountancy போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 01.06.2019 தேதியின்படி 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் IBPS-ஆல் நடத்தப்படும் முதல்நிலை தேர்வு, முதன்மை ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். பின்னர் தேவையான பயிற்சிக்குப் பின் நிரந்தரப் பணி வழங்கப்படும். நேர்முகத்தேர்வின்போது தேவையான சான்றுகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய கையொப்பமிடப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600/-. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100/-. இதனை கிரெடிட், டெபிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவுடன் கணினியில் வழங்கப்படும் e-recepit-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு பற்றிய விவரங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். தகவல் பெற்றவுடன் IBPS இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள Call Letter-ஐ பதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் புகைப்படம் ஒட்டி எழுத்துத் தேர்வுக்கு கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விவரங்களை அறிய www.ibps.in அல்லது https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்
ஆன்லைன் தேர்வுக்கு உரிய Call Letterஐ ஜூலை 2019 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி:04.07.2019