குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சைதை துரைசாமி மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள், பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. இதில் பங்கு பெற்று இதுவரை 3 ஆயிரத்து 366 பேர் வெற்றி அடைந்து, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். குரூப்-4 தேர்வு அதன் தொடர்ச்சியாக, டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப்-4 காலி பணியிடங்களுக்கான தேர்வுக்கும் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுக்கு, அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க டி.என்.பி.எஸ்.சி. அறிவுறுத்தி இருக்கிறது. இந்த பணிகளுக்கான தேர்வு செப்டம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுபவர்கள் மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கலாம். இந்த பயிற்சி பெற www.mnt-f-r-e-e-ias.com என்ற மனிதநேய இணையதளத்தில் Re-g-ist-er for TN-P-SC Gr.IV Ex-am 2019 என்ற இணைப்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவர்களுக்கு தேர்வுகள், வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்தகவலை மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
Home »
COACHING CENTRE - TNPSC
» tnpsc குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
tnpsc குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment