- TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : Junior Scientific Officer உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 64 .
- விளம்பர அறிவிப்பு நாள் : 21.06.2019.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.07.2019.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 24.08.2019 .
- இணைய முகவரி : http://www.tnpsc.gov.in/latest-notification.html
தமிழக அரசின் தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான தேர்வு ஆகஸ்டு 24-ல் நடைபெறுகிறது. இதற்கு ஜூலை 22 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக அரசின் தடயவியல் துறையில் 64 இளநிலை அறிவி யல் அதிகாரி பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப் பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்டு 24-ம் தேதி நடை பெறும். இப்பணிக்கு எம்.எஸ்சி. தடயவியல், விலங்கியல், தாவர வியல், உயிரி வேதியியல், நுண்ணு யிரியல், உயிரி தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், கம்ப் யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்களில் 40 இடங்கள் வேதியியல் பிரிவுக்குரி யவை. வயது வரம்பு பொதுப்பிரி வினருக்கு 30, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்) வயது வரம்பு ஏதும் கிடை யாது.
எழுத்துத்தேர்வில், சம்பந்தப் பட்ட பாடப்பிரிவில் 200 கேள்வி களும், பொது அறிவு பகுதியில் 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 500. எழுத்துத்தேர்வில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இதற்கு 70 மதிப்பெண். தகுதியுடைய முது கலை பட்டதாரிகள் தேர்வாணை யத்தின் இணையதளத்தை (www.tnpsc.gov.in) பார்வையிட்டு ஜூலை 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப முறை, தேர்வுக்கட்டணம், தேர்வுமை யம், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத் தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Facebook
Google
Twitter
EmailShare
© 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
No comments:
Post a Comment