- UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : புவியியல் நிபுணர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 027 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.04.2019.
- UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : IES உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 032 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.04.2019.
- FSSAI RECRUITMENT 2019 | FSSAI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உணவு பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 275 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.
- NFL RECRUITMENT 2019 | NFL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மார்க்கெட்டிங் ரெப்ரசன்டேடிவ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 040 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.04.2019.
- IMD RECRUITMENT 2019 | IMD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 040 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2019.
- JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 70 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019.
- RITES RECRUITMENT 2019 | RITES அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 064 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.04.2019.
- ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 496 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019.
- VOC PORT RECRUITMENT 2019 | VOC PORT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 072 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.vocport.gov.in
- HIGH COURT RECRUITMENT 2019 | HIGH COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சட்ட கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.
- SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 129 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.04.2019.
-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
வேலை - கால அட்டவணை - 01 APRIL 2019
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : புவியியல் நிபுணர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 027 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.04.2019.
புவியியல் ஆராய்ச்சியாளர் தேர்வு 106 காலியிடங்கள் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியல் நிபுணர் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை யூ.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., அரசின் பல்வேறு உயர்நிலை பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கிறது. தற்போது மத்திய அரசுத்துறைகளில் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான, ‘ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட்’ ஒருங்கிணைந்த தேர்வு-2019 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வின் மூலம் 106 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஜியாலஜிஸ்ட் பணிக்கு 50 இடங்களும், ஜியோபிசிக்ஸ்ட் பணிக்கு 14 இடங்களும், கெமிஸ்ட் பணிக்கு 15 இடங்களும், ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் பணிக்கு 27 இடங்களும் உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனு மதிக்கப்படும். கல்வித்தகுதி ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் இவை சார்ந்த முதுநிலை பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கட்டணம் விருப்பம் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஜூன் 28-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : IES உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 032 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.04.2019.
ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணியிடங்களுக்கான தேர்வு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் உயர் அதிகாரி பதவிகளான, இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் (ஐ.இ.எஸ்.) மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் (ஐ.எஸ்.எஸ்.) போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வு மூலம் 65 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஐ.இ.எஸ். பணிக்கு 32 இடங்களும், ஐ.எஸ்.எஸ். பணிக்கு 33 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 1-8-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பொருளாதாரம், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்காமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர்கள் ஐ.இ.எஸ். தேர்வுக்கும், புள்ளியியல், கணிதவியல், கணிதப் புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர்கள். ஐ.எஸ்.எஸ். பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 16-ந் தேதியாகும். அப்ளிகேசன்களை ரத்து செய்ய விரும்பினால் ஏப்ரல் 23 முதல் 30-ந் தேதிக்குள்ளாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான தேர்வு ஜூன் 28-ந் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
FSSAI RECRUITMENT 2019 | FSSAI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உணவு பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 275 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனத்தில் 275 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறு வனம், சுருக்கமாக (FSSAI) என்று குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரி, உணவு பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர், பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு 130 பேரும், உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 37 பேரும், உதவியாளர் பணிக்கு 34 பேரும், பெர்சனல் அசிஸ்டன்ட் பணிக்கு 25 பேரும், உதவி இயக்குனர் பணிக்கு 20 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் அசிஸ்டன்ட், அசிஸ்டன்ட் மேனேஜர், ஐ.டி. அசிஸ்டன்ட், டெபுடி மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணியிடங்கள் உள்ளன. மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி பி.இ., பி.டெக் படித்தவர்கள், சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் இதர இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படித்தவர் களுக்கு சில பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பெண் விண்ணப்பதாரர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://fssai.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
NFL RECRUITMENT 2019 | NFL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மார்க்கெட்டிங் ரெப்ரசன்டேடிவ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 040 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.04.2019.
தேசிய உர நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ரெப்ரசன்டேடிவ் பணியிடங்களுக்கு 40 பேரை தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதார்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எஸ்சி. (அக்ரி) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 18-ந் தேதியாகும்.
IMD RECRUITMENT 2019 | IMD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 040 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2019.
இந்திய வானியல் துறையில் சயின்டிஸ்ட் (கிரேடு இ, டி. மற்றும் சி) பணிகளுக்கு 40 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ஜினீயரிங் மற்றும் துறைசார்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.imd.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 42 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மார்ச் 14-ல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 70 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019.
ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ‘ஜிப்மர்’ (JIPMER) என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியில் செயல்படும் இந்த கல்வி-ஆராய்ச்சி மையத்தில் தற்போது பேராசிரியர். உதவி பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 70 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனட்டாமி, அனஸ்திசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மெடிசின், இ.என்.டி., டென்டிஸ்ட்ரி, ஆப்தமாலஜி, ஆர்த்தோபெடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பேத்தாலஜி, பார்மகாலஜி, சைகியாலஜி, சைகியாட்ரி, பல்மோனரி மெடிசின், ரேடியோ டயக்னாசிஸ், சர்ஜரி உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளன. இவை தவிர கற்பித்தல் சாராத லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை மருத்துபடிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள், பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு படித்தவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். லோயர் டிவிசன் கிளார்க் பணி விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மே 1-ந் தேதியாகும்.
RITES RECRUITMENT 2019 | RITES அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 064 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.04.2019.
இந்திய ரெயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ரிட்ஸ். ரெயில்வே கட்டமைப்புக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வது இந்த நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், பட்டதாரி என்ஜினீயர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 64 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேசன், ஆர்கிடெக்சர், சிஸ்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள், குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 3-4-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rites.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 496 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019.
ஐ.டி.பீ.பி. துணை ராணுவ படையில் 496 மருத்துவ அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. (ITBP) என அழைக்கப் படுகிறது. துணை ராணுவ படைகளில் ஒன்றான இந்த படைப்பிரிவில் தற்போது சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர், ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர், மெடிக்கல் ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 496 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் தரத்திலான மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 317 இடங்களும், டெபுடி கமாண்டன்ட் தரத்திலான ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 175 இடங்களும், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் அதிகாரி (சீனியர் கமாண்டன்ட்) பணிக்கு 4 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், மருத்துவ அதிகாரி பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-5-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். கல்வித்தகுதி அலோபதி மருத்துவம் படித்தவர்கள் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம், பணி அனுபவம் அவசியம். முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புடன் குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் இதர பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண்கள் ரூ.400 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு நாளை (2-ந் தேதி) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசிநாள் மே 1-ந் தேதியாகும். விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
VOC PORT RECRUITMENT 2019 | VOC PORT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 072 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.vocport.gov.in
HIGH COURT RECRUITMENT 2019 | HIGH COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சட்ட கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.
சென்னை ஐகோர்ட்டில், சட்ட கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் மதுரை பெஞ்சில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். முதுநிலை சட்டம் மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள், ‘The Registrar General, High Court, Madras-600 104’ என்ற முகவரிக்கு ஏப்ரல் 25-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களை www.hcmadras.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 129 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.04.2019.
பிரபல வங்கிகளில் அதிகாரி பணிகள் 2 பிரபல வங்கிகளில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சிண்டிகேட் வங்கி பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான சீனியர் மேனேஜர், மேனேஜர், செக்யூரிட்டி அதிகாரி போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 129 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி வாரியான விவரம்: சீனியர் மேனேஜர் (ரிஸ்க் மேனேஜ்மென்ட்) - 5, மேனேஜர் (ரிஸ்க் மேனேஜ்மென்ட்) - 50, மேனேஜர் (சட்டம்) - 41, மேனேஜர் (ஆடிட்) - 3, செக்யூரிட்டி அதிகாரி - 30 . இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... கல்வித்தகுதி பட்டப்படிப்பு படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.ஏ. (பேங்கிங், நிதி), எம்.எஸ்சி., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-2-2019-ந் தேதியில், 25 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஏப்ரல் 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.syndicatebank.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஐ.டி.பி.ஐ. வங்கி தொழில் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் சார்ட்டடு அக்கவுண்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. டெபுடி பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மேலாளர் போன்ற பதவிகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. சி.ஏ., ஐ.சி.டபுள்யூ. படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.idbi.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 8-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
வேலை - கால அட்டவணை - 25 MARCH 2019
- VCRC RECRUITMENT 2019 | VCRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019.
- CIMFR RECRUITMENT 2019 | CIMFR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 067 | நேரடி நேர்காணல் நாள் : 02.04.2019.
- ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 092 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019.
- ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 23+9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.04.2019. இணைய முகவரி : www.ongcindia.com
- NTCLTD RECRUITMENT 2019 | NTCLTD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 109 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.ntcltd.org
- NTRO RECRUITMENT 2019 | NTRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.04.2019. இணைய முகவரி : www.introrectt.in
- NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in
- BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 400 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2019. இணைய முகவரி : www.bheltry.co.in
- ESIC RECRUITMENT 2019 | ESIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1934 | விண்ணப்பம் துவக்கம் : 00.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.esic.nic.in
- RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1665 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.03.2019. இணைய முகவரி : www.bmrc.co.in
VCRC RECRUITMENT 2019 | VCRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய நிறுவனங்களில் ஒன்று, வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டர். புதுச்சேரியை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மதுரை, கோட்டயம், கோராபுட் போன்ற கிளை மையங்களில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேப் அட்டன்ட், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 56 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.vcrc.res.in என்ற இணையதளம் வழியாக, விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.300 கட்டண டி.டி. ஏப்ரல் 15-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை மேற் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.
CIMFR RECRUITMENT 2019 | CIMFR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 067 | நேரடி நேர்காணல் நாள் : 02.04.2019.
மத்திய சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி மையம் (CIMFR) திட்ட உதவியாளர் (புராஜெக்ட் அசிஸ்ட்டன்ட்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எஸ்சி, எம்.எஸ்சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள், பி.இ.,பி.டெக் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணியிடங்கள் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பப்படுகிறது. ஏப்ரல் 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையும் நேர்காணல் நடக்கிறது. எந்த நாளில் எந்த பணிக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்துக் கொண்டு நேரில் செல்லவும். இது பற்றிய விவரங்களுக்கு http://cimfr.nic.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 092 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019.
தேசிய தொழுநோய் மற்றும் நுண்ணுயிர் நோய்கள் ஆராய்ச்சி மையம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் புராஜக்ட் ெடக்னீசியன் டி.இ.ஓ., சீனியர் ரிசர்ச் பெல்லோ, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10,12-ம் வகுப்பு படித்தவர்கள், லேப்டெக்னீசியன் டிப்ளமோ படித்தவர்கள், மருத்துவம் சார்ந்த முதுநிலை படிப்புகள் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப் படுகிறது. வருகிற ஏப்ரல் 2, 3-ந் தேதிகளில் இதற்கான நேர் காணல் நடக்கிறது. குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.jalma-icmr.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 23+9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.04.2019. இணைய முகவரி : www.ongcindia.com
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யில் (ONGC), நிர்வாக அதிகாரி பணிகளுக்கு 23 பேரும், உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு, முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டப்படிப்புடன் ‘கிளாட் 2019’ தேர்வை எதிர்கொள்பவர்கள் உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., எச்.ஆர்.டி முதுநிலை படிப்பு படித்தவர்கள், ஜர்னலிசம், மாஸ்கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன்ஸ் முதுநிலை படிப்பு படித்தவர்கள், நெட்-ஜூன் 2019 தேர்வை எதிர்கொள்பவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 9-ந் தேதியாகும்.
NTCLTD RECRUITMENT 2019 | NTCLTD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 109 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.ntcltd.org
மத்திய துணி நிறுவனத்தில் அதிகாரி வேலை மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேசன் லிமிடெட். மத்திய ஜவுளி நிறுவனமான இதில் தற்போது ஜெனரல் மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், சீனியர் மேனேஜர் போன்ற அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம், நிதி, எச்.ஆர்., நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அதிகாரி பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 109 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 35 முதல் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. டெக்ஸ்டைல் என்ஜினீரியங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.டபுள்யு., சட்டப் படிப்பு போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான அப்ளிகேசனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் ரூ.300 கட்டண டி.டி. மற்றும் புகைப்படம் உள்ளிட்ட சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் 12-4-2019-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.ntcltd.org என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
NTRO RECRUITMENT 2019 | NTRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.04.2019. இணைய முகவரி : www.introrectt.in
மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு அடிப்படையில் 127 பேர் பணியமர்த்தப்படுகிறார்கள். தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் சுருக்கமாக என்.டி.ஆர்.ஓ. (NTRO) என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் தேர்வு நடத்தி தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது 2019-ம் ஆண்டுக்கான டெக்னிக்கல் அசிஸ்டன்ட் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை ‘குரூப்-பி’ தரத்திலான (நான் ஹெசட்டடு) குடிமைப் பணியிடங்களாகும். எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 52 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 75 இடங்களும் உள்ளன. மொத்தம் 127 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப்பிரிவுக்கு 48 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 37 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 12 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 8 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 22 இடங்களும் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) மூலம் தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 4-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.introrectt.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in
இளைஞர் அமைப்பில் ‘டைப்பிஸ்ட்’ பணி மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் நேரு யுவகேந்திரா சங்கேதன். இளைஞர் மேம்பாட்டு அமைப்பான இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணிகளுக்கு 225 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 100 இடங்களும், அக்வுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 73 இடங்களும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 52 இடங்களும் உள்ளன. முதுநிலை பட்டதாரிகள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் (nyks.nic.in) வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-3-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 400 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2019. இணைய முகவரி : www.bheltry.co.in
திருச்சி பெல் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 400 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது திருச்சி கிளையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பிட்டர் பணிக்கு 150 இடங்களும், வெல்டர் பணிக்கு 110 இடங்களும், டர்னர் பணிக்கு 11 இடங்களும், மெஷினிஸ்ட் பணிக்கு 16 இடங்களும், எலக்ட்ரீசியன் பணிக்கு 35 இடங்களும், சிஸ்டம் அட்மின் பணிக்கு 20 இடங்களும் உள்ளன. இவை தவிர வயர்மேன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெட்டல் ஒர்க்கர், கார்பெண்டர், பிளம்பர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பாக முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொள்ளவும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 30-3-2019-ந் தேதியாகும். ஏப்ரல் 4-ந்தேதி சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். தகுதியானவர்கள் 11-4-2019 முதல் பயிற்சி பணியில் சேரலாம். இது பற்றிய விவரங்களை www.bheltry.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ESIC RECRUITMENT 2019 | ESIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1934 | விண்ணப்பம் துவக்கம் : 00.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.esic.nic.in
இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் பணியிடங்களுக்கு 1934 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தொழிலாளர் காப்பீட்டு கழக நிறுவனம் சுருக்கமாக இ.எஸ்.ஐ.சி. என அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இதன் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள மாநில இ.எஸ்.ஐ. கிளைகளில் ஸ்டெனோகிராபர் மற்றும் மேல்நிலை கிளார்க் (அப்பர் டிவிஷன் கிளார்க்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழக இ.எஸ்.ஐ. கழகத்தில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 20 இடங்களும், மேல்நிலை டிவிஷன் கிளார்க் பணிக்கு 131 இடங்களும் உள்ளன. மொத்தம் நாடு முழுவதும் 1934 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாநிலம் வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 15-4-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பிளஸ்-2 படிப்புடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஏப்ரல் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.esic.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1665 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.03.2019. இணைய முகவரி : www.bmrc.co.in
ரெயில்வே நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெங்களூரு மெட்ரோ, குஜராத் மெட்ரோ மற்றும் ரெயில்வே சுற்றுலா கழகம் உள்ளிட்ட ரெயில்வே நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆர்.ஆர்.பி. 1665 பணியிடங்கள் ரெயில்வே ஆட்தேர்வு வாரியம், அமைச்சு மற்றும் தனித்தனி நிலை பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. ஸ்டெனோகிராபர், இளநிலை மொழி பெயர்ப்பாளர், தலைமை சட்ட உதவியாளர் உள்ளிட்ட 30 பிரிவில் பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. மொத்தம் 1665 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிவாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. சில பணியிடங்களுக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அனுமதிக்கப்படுகிறது. பிளஸ்-2 படித்தவர்கள், அத்துடன் சுருக்கெழுத்து படித்தவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை இந்தி, ஆங்கிலம் படித்தவர்கள் இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம் பட்டப்படிப்பு, பிளஸ்-2 படிப்புக்குப் பின், அறிவியல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள், முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பி.ஏ. இசை, நடனம் படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற ஏப்ரல் 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான கணினி தேர்வு ஜூன், ஜூலையில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை http://www.rrcb.gov.in மற்றும் www.rrbchennai.gov.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். ஐ.ஆர்.சி.டி.சி. இந்திய ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக அமைப்பு (ஐ.ஆர்.சி.டி.சி.), தெற்கு மண்டலத்தில் சூப்பிரவைஸர் (ஹாஸ்பிடாலிட்டி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை 2 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தகுதியானவர்கள் மேலும் ஓராண்டு பணியாற்ற அனு மதிக்கப்படுவார்கள். பி.எஸ்சி. (ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேசன்) படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-3-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படும். நேரடி நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான நேர்காணல் ஏப்ரல் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. சென்னையில் 12-ந் தேதியும், பெங்களூருவில் 10-ந் தேதியும், திருவனந்தபுரத்தில் 9-ந் தேதியும் நேர்காணல் நடப்பது குறிப்பிடத்தக்கது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.irctc.com/careers_En.jsp என்ற இணையதளத்தில் பார்க்கலாம். குஜராத் மெட்ரோ குஜராத் மெட்ரோ ரெயில் நிறு வனத்தில் பொது மேலாளர் (சிவில்), மேலாளர், துணை பொதுமேலாளர், சூப்பிரவைசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயர் ஆர்கிடெக்ட் என்ஜினீயர் பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. முழுமையான விவரத்தை www.gujaratmetrorail.comஎன்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 5-4-2019-ந் தேதியாகும். பெங்–க–ளூரு மெட்ரோ பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனம், கர்நாடகா மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து செயல்படுத்தும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர், செக்சன் என்ஜினீயர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். செக்சன் என்ஜினீயர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்ட, பி.இ., பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுடையவர்களும், அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 45 வயதுக்கு உட்பட்டவர்களும், எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி பெங்களூரு மெட்ரோவில் ஜெனரல் மேனேஜர், சீப் என்ஜினீயர் போன்ற பணிகளுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கும் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இவை பற்றிய முழுமையான விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 8-4-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
வேலை - கால அட்டவணை - 18 MARCH 2019
- S.I RECRUITMENT 2019 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சப்-இன்ஸ்பெக்டர் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 969 | விண்ணப்பம் துவக்கம் : 20.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.04.2019. இணைய முகவரி : www.tnusrbonline.org
- ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்டன்ட், அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 653 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.03.2019. இணைய முகவரி : www.ongcapprentices.co.in
- AIRINDIA RECRUITMENT 2019 | AIRINDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 160 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.airindia.in
- BARODA BANK RECRUITMENT 2019 | BARODA BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019. இணைய முகவரி : www.bankofbaroda.com
- BANK RECRUITMENT 2019 | UBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிரெடிட் அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 181 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019. இணைய முகவரி : www.unionbankofindia.co.in பிரபல வங்கிகளில் அதிகாரி பணியிடங்கள்
- NAVY RECRUITMENT 2019 | NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமிஷன் ஆபீஸர் உள்ளிட்ட பயிற்சி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 53 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.04.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in
- RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 103769 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.indianrailways.gov.in
- TNPOST RECRUITMENT 2019 | TNPOST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4,442 | விண்ணப்பம் துவக்கம் : 00.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.tamilnadupost.nic.in
S.I RECRUITMENT 2019 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சப்-இன்ஸ்பெக்டர் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 969 | விண்ணப்பம் துவக்கம் : 20.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.04.2019. இணைய முகவரி : www.tnusrbonline.org
ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்டன்ட், அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 653 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.03.2019. இணைய முகவரி : www.ongcapprentices.co.in
AIRINDIA RECRUITMENT 2019 | AIRINDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 160 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.airindia.in
BARODA BANK RECRUITMENT 2019 | BARODA BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019. இணைய முகவரி : www.bankofbaroda.com
BANK RECRUITMENT 2019 | UBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிரெடிட் அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 181 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019. இணைய முகவரி : www.unionbankofindia.co.in பிரபல வங்கிகளில் அதிகாரி பணியிடங்கள்
NAVY RECRUITMENT 2019 | NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கமிஷன் ஆபீஸர் உள்ளிட்ட பயிற்சி பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 53 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.04.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in
RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 103769 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.indianrailways.gov.in
TNPOST RECRUITMENT 2019 | TNPOST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4,442 | விண்ணப்பம் துவக்கம் : 00.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019. இணைய முகவரி : www.tamilnadupost.nic.in
வேலை - கால அட்டவணை - 16 MARCH 2019
- TNPCB RECRUITMENT 2019 | TNPCB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 224 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : www.tnpcb.gov.in
- FOREST RECRUITMENT 2019 | FOREST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 | விண்ணப்பிக்க கடைசி நாள் : மே 3-வது வாரத்திற்குள் இணைய முகவரி : www.forests.tn.gov.in
- SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1000 above | விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.04.2019. இணைய முகவரி : www.ssc.nic.in
- MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பார்மசிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 353 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2019. இணைய முகவரி : www.tn.mrb.nic.in
- TNUSRB RECRUITMENT 2019 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.04.2019 இணைய முகவரி : www.tnusrbonline.org
- RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பார்மசிஸ்ட், மலேரியா ஆய்வாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1937 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019. இணைய முகவரி : www.rrbchennai.net
- LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 590 | விண்ணப்பிக்க கடைசி நாள் :22.03.2019. இணைய முகவரி : www.licindia.in
TNPCB RECRUITMENT 2019 | TNPCB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 224 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : www.tnpcb.gov.in
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் வேலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 224 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவிப் பொறியாளர், உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவிப் பொறியாளர் பணிக்கு 73 இடங்களும், சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு 60 இடங்களும் உதவியாளர் பணிக்கு 36 இடங்களும், தட்டச்சர் பணிக்கு 55 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு 1-1-2018-ந் தேதி அன்று 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு பெறுபவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிவில், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து, முதுநிலை என்விரான்மென்டல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட், டெக்னாலஜி, பெட்ரோலியம் ரீபைனிங் படித்தவர்கள் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேதியியல், உயிரியல், தாவரவியல், உள்ளிட்ட சுற்றுச்சூழல், உயிரியல் தொடர்புடைய 12 விதமான அறிவியல் படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் சுற்றுச்சூழல் வஞ்ஞானி பணிக்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்புகளுடன், கணினி படிப்பில் சான்றிதழ் பெற்றவர்கள் உதவியாளர் பணிக்கும், பட்டப்படிப்புடன் தட்டச்சு சான்றிதழ், கணினி படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் தட்டச்சர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 31-ந் தேதியாகும். http://www.tnpcb.gov.in/
FOREST RECRUITMENT 2019 | FOREST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 564 | விண்ணப்பிக்க கடைசி நாள் : மே 3-வது வாரத்திற்குள் இணைய முகவரி : www.forests.tn.gov.in
வனத்துறையில் 564 வேலைவாய்ப்புகள் தமிழக வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தற்போது வனக் காவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 564 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 99 பணியிடங்கள் பழங்குடியின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மே 3-வது வாரத்திற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1000 above | விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.04.2019. இணைய முகவரி : www.ssc.nic.in
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மத்திய அரசு துறைகளில், பிளஸ்-2 தரத்திலான கீழ்நிலை பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிளஸ்-2 தகுதி உடையவர்களுக்கான போஸ்டல் அசிஸ்டன்ட்/ சோர்டிங் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு ஒருங்கிணைந்த செகண்டரி லெவல் தேர்வு-2019 மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்குமான காலியிட விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் 3 ஆயிரத்து 259 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. எனவே இந்த வருடமும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயதினை கடந்தவராகவும், 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1992 மற்றும் 1-8-2001-ந் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல் நிலை கல்வியில் (12-ம் வகுப்பு) அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை: விண்ணப்பித்தவர்கள் கணினித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் வெற்றிபெறுபவர்களுக்கு தட்டச்சு தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அசல் மதிப்பெண் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும். கட்டணம்: விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பார்ட்-1 மற்றும் பார்ட்-2 ஆகிய இரு நிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கான கணினி தேர்வு (முதல்நிலை-1) ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடக்கிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 5-4-2019-ந்தேதி ஆகும். மேலும் விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பார்மசிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 353 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.03.2019. இணைய முகவரி : www.tn.mrb.nic.in
தமிழகத்தில் 353 மருந்தாளுனர் பணியிடங்கள் தமிழகத்தில் மருந்தாளுனர் பணிக்கு 353 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) தற்போது பார்மசிஸ்ட் (மருந்தாளுனர்) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 353 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆண்களுக்கு 220 இடங்களும், பெண்களுக்கு 101 இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 18 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்களும் உள்ளன. பிரிவு வாரியான இடஒதுக்கீடு அடிப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி பார்மசி டிப்ளமோ படிப்பு படித்து, பார்மசி கவுன்சிலில் பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் எஸ்சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற மார்ச் 21-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்தியன் வங்கி வழியாக 25-ந் தேதி வரை கட்டணம் செலுத்தலாம். தேதி நீடிப்பு எம்.ஆர்.பி. அமைப்பு, நர்ஸ் பணிகளுக்கு 2 ஆயிரத்து 345 பணியிடங்களை நிரப்ப ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நர்சிங் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பிப்ரவரி 27-ந் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மார்ச் 13-ந் தேதி வரை இந்த அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை http://www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
TNUSRB RECRUITMENT 2019 | TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.04.2019 இணைய முகவரி : www.tnusrbonline.org
தமிழகத்தில் கான்ஸ்டபிள் பணிக்கு 8826 இடங்கள் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.என். யூ.எஸ்.ஆர்.பி. எனப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு தமிழக காவல்துறை, சிறைத்துறை, மற்றும் தீயணைப்பு பிரிவில் கான்ஸ்டபிள் (இரண்டாம் நிலை காவலர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காவல்துறையில் ஆண்களுக்கு 5 ஆயிரத்து 962 இடங்களும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 2 ஆயிரத்து 465 இடங்களும், சிறைத்துறையில் மொத்தம் 208 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 191 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 8 ஆயிரத்து 826 இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு 1-7-2019-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு ஏப்ரல் 8-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பார்மசிஸ்ட், மலேரியா ஆய்வாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1937 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019. இணைய முகவரி : www.rrbchennai.net
LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 590 | விண்ணப்பிக்க கடைசி நாள் :22.03.2019. இணைய முகவரி : www.licindia.in
வேலை - கால அட்டவணை - 04 MARCH 2019
- RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 223 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2019. இணைய முகவரி : www.rcf.indianrailways.gov.in
- TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 814 | விண்ணப்பம் துவக்கம் : 20.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.04.2019. இணைய முகவரி : http://trb.tn.nic.in/
- TNTET 2019 | தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு | விண்ணப்பம் துவக்கம் : 15-3-2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.04.2019 | இணைய முகவரி : trb.tn.nic.in
- RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 35,277 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : http://www.rrcb.gov.in/rrbs.html
- INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 554 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in