RAILWAY RECRUITMENT 2019 |
RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 223 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2019.
இணைய முகவரி : www.rcf.indianrailways.gov.in
ரெயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 223 பேர் தேர்வு செய்யப்படுகிறாா்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் ரெயில்பெட்டி தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், பெயின்டர், கார்பெண்டர், மெக்கானிக் (மோட்டார் வெகிகிள்), எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி. அண்ட் ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிக் போன்ற பிரிவில் பயிற்சிப் பணிகள் உள்ளன. பணி வாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 23-2-2019-ந் தேதியில் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்ப தாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 23-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். 28-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rcf.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
0 Comments