Job | Kalvisolai Job | Kalvisolai Employment

  • This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி

  • அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெற அரசு அழைப்பு சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
  • அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவை யான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந் தோறும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வபயிலும் வட்டங்கள் செயல்பட்டு வரு கின்றன. 
  • இங்கு டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
  • இப்பயிற்சி வகுப்புகளில் தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள், சஞ்சிகை கள் ஆகியவை பராமரிக்கப் படுவதுடன், மாதிரித் தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவை யும் இலவசமாக நடத்தப்படு கின்றன. 
  • தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவர் களும், தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர் களும் பயன்பெறுவதற்காக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மெய்நிகர் கற்றல் வலைதளம் (http://tamilnaducareerservices.tn.gov.in) செயல்பட்டு வருகிறது. 
  • இந்த இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப் -7பி, 8, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான குறிப்பு கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும், இப்பாடக் குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. 
  • இந்த வலைதளத்தை செல் போன் மூலமாகப் பயன்படுத் துவதற்காக ஒரு செல்போன் செய லியும் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை (http://tamilnaducareerservices.tn.gov.in) தர விறக்கம் செய்து தமது செல் போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் இந்த மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக் குறிப்புகளைத் தத்தமது செல்பேசியிலேயே பதிவுதாரர்கள் படிக்க முடியும். 
  • எனவே, அரசுத் துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் இந்த இணைய தளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து இந்த வலைதளத் தின் சேவைகளை இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share:

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


  • சென்னையில் நாளை (31.01.2020) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
  • சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் கிண்டி ஆலந்தூர் சாலை யில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளா கத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 
  • இதில், 35 வயதுக்குட் பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐடிஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, நர்சிங் ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.  
  • இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இச்சேவைக்கு கட்ட ணம் இல்லை. 
  • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்கு நர் வெளியிட்ட செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.
Share:

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.02.2020.

  • CDAC RECRUITMENT 2019 | CDAC  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மேனேஜர், புராஜெக்ட் ஆபீசர், புராஜெக்ட் சப்போர்ட் ஸ்டாப் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 143 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.02.2020.
  • இணைய முகவரி : https://cdac.in/ 
கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் சி.டி.ஏ.சி. என்று அழைக்கப்படுகிறது. புராஜெக்ட் என்ஜினீயர், புராஜெக்ட் மேனேஜர், புராஜெக்ட் ஆபீசர், புராஜெக்ட் சப்போர்ட் ஸ்டாப் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 143 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அதிகபட்சமாக புராஜெக்ட் என்ஜினீயர் (சாப்ட் வேர் டிசைன், அண்ட் டெவலப்பர்) 80 இடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பி.இ., பி.டெக் பட்டதாரிகள், எம்.சி.ஏ., எம்.டெக், எம்.இ. முதுநிலை பட்டதாரிகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகாரி தரத்திலான பணிகளுக்கு அதிகபட்சம் 50 வயதுடையவர்களும், அலுவலர் பணியிடங்களுக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

வருகிற 30-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. எந்த நாளில் எந்தெந்த பணிக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேரில் செல்ல வேண்டும்.

இது பற்றிய விவரங்களை https://cdac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT 2019 | DR AMBEDKAR LAW UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.

  • DR AMBEDKAR LAW UNIVERSITY RECRUITMENT 2019 | DR AMBEDKAR LAW UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி :  பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், உதவி நூலகர், உதவி உடற்கல்வி இயக்குனர்.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 82 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
  • இணைய முகவரி : www.tndalu.ac.in
சென்னையில் செயல்படும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில், பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், உதவி நூலகர், உதவி உடற்கல்வி இயக்குனர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 82 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் சார்ந்த முதுநிலை படிப்பு, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது, இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Share:

MOTHER THERESA UNIVERSITY RECRUITMENT 2019 | MOTHER THERESA UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.

  • MOTHER THERESA UNIVERSITY RECRUITMENT 2019 | MOTHER THERESA UNIVERSITY  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
  • இணைய முகவரி : https://www.motherteresawomenuniv.ac.in/
கொடைக்கானலில் செயல்படும் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வேதியியல், இயற்பியல், கணிதவியல், ஹோம் சயின்ஸ், ஆங்கிலம், உமன்ஸ் ஸ்டடிஸ், வணிகவியல், மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவு சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விரிவான விவரங்களை https://www.motherteresawomenuniv.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 7-ந் தேதியாகும்.
Share:

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.

  • NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2020.
  • இணைய முகவரி : https://www.nabard.org/
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு எனப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் அதிகாரி (கிரேடு-ஏ) பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவை உதவி மேலாளர் தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சட்டம் மற்றும் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களாக இருக்க வேண்டும். ராஜ்பாஷா பணியிடத்திற்கு முதுநிலை மொழிபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் 1-1-2020-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.150 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

வரும் பிப்ரவரி 3-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.



Share:

INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-2-2020

  • INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-2-2020
  • இணைய முகவரி : http://joinindiancoastguard.gov.in/
இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

‘இந்தியன் கோஸ்ட் கார்டு’ எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப்படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.

தற்போது இந்த படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி பணியான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதி யானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு ஆட்சேர்க்கை நுழைவாகும்.

இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதர தகுதி விவரங்கனை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-1990 மற்றும் 30-6-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ெஜனரல் டியூட்டி பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும். பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து, பட்டப் படிப்பை முடித்தவர்கள், பைலட் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 15-2-2020-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களை http://joinindiancoastguard.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN BANK RECRUITMENT 2019 | INDIAN BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.

  • INDIAN BANK RECRUITMENT 2019 | INDIAN BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : சிறப்பு அதிகாரி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 138 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
  • இணைய முகவரி : www.indianbank.in
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அசிஸ்டன்ட் மேனேஜர் (கிரெடிட்), மேனேஜர் (கிரெடிட், செக்யூரிட்டி, பாரக்ஸ், லீகல், டீலர், ரிஸ்க் மேனேஜ்மென்ட்) போன்ற பிரிவுகளில் பணிகள் உள்ளன. மொத்தம் 138 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 85 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு 20 முதல் 30 வயதுடையவர்களும், சில பணிகளுக்கு 25 முதல் 35 வயதுடையவர்களும், சில பணிகளுக்கு 27 முதல் 37 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எப்.ஏ., எல்.எல்.பி. மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 8-ந் தேதி நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianbank.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
Share:

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் தேர்வு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டில் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனை களில் ஏற்படும் காலி பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்று விக்கப்படும் பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்தியாவில் முதல் முறையாக தமிழக சுகாதாரத் துறைக்கு என கடந்த 2012ம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தொடங் கப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 30 ஆயிரம் பேர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு தேர்வுகள் குறித்த அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர் வாணையம் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளி யிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், உதவி டாக்டர்கள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரி (சித்தா) தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாத மும், உதவி மருத்துவ அதிகாரி (ஓமியோபதி, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மார்ச் மாதமும் வெளியிடப்படும்.

உதவி சிறப்பு டாக்டர் அறிவிப்பு மே மாதமும், லேப் டெக்னீசி யன் கிரேடு-2 அறிவிப்பு ஏப்ரம் மாதமும், இசிஜி டெக்னீசியன் அறிவிப்பு செப்டம்பர் மாதமும், உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் அக்குபேஷனல் தெரப்பிஸ்ட் அறிவிப்பு அக்டோபர் மாதமும், மருந்தாளுநர் அறிவிப்பு நவம்பர் மாதமும் வெளியாகவுள்ளது.

அறிவிப்பு வெளியான ஓரிரு மாதங்களில் எழுத்து தேர்வு மற் றும் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படுபவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “2020-ம் ஆண்டில் 2 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் 3 ஆயிரம் பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்” என்றனர்.
Share:

சென்னையில் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, வேலை வாய்ப்பு வெள்ளியாக அனுசரிக் கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை யில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெறுகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங் களும் இணைந்து வரும் 24-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 24-ம் தேதி காலை 10 முதல் பகல் 2 மணி வரை முகாம் நடக்கிறது.

இதில், 35 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதி யுடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறு வனத்துக்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர்  உள்ளிட்ட பணி .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2020.
  • இணைய முகவரி : www.upsc.gov.in
மத்திய அரசுத்துறைகளில் அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கு 421 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி.எஸ்.சி. மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல் படுகிறது. தற்போது தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அமலாக்க அதிகாரி/கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப இந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 421 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

இளநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

கட்டணம்:

பொதுப்பிரிவினர் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுகள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்www.upsconline.nic.in, www.upsc.gov.in ஆகிய இணையதள பக்கத்தைப் பார்க்க லாம்.
Share:

NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • NAVY RECRUITMENT 2019 | INDIAN NAVY  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : பெட்டி ஆபீசர்’ அதிகாரி உள்ளிட்ட பணி .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-1-2020.
  • இணைய முகவரி : www.joinindiannavy.gov.in
கடற்படையில் ‘பெட்டி ஆபீசர்’ அதிகாரி பணிக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு படிப்புடன், விளையாட்டில் சாதித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி நுழைவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெட்டி ஆபீசர் தரத்திலான அதிகாரி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்கும் செய்லர் (ஸ்போர்ட்ஸ் கோட்டா 1-2020 ) என்ட்ரி எனும் பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற திருமணம் ஆகாத இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

17 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 1-4-1998 மற்றும் 31-1-2003 ஆகிய இரு தேதி களுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.எஸ்.ஆர். மற்றும் எம்.ஆர். பணியிடங்களுக்கு 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி:

எம்.ஆர். பிரிவு பணியில் சேர 10-ம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.ஆர். மற்றும் பெட்டி ஆபீசர் என்ட்ரி பணியில் சேர பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தடகளம், நீர்விளையாட்டுகள், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஆக்கி, கபடி, ஹேண்ட்பால், பளுதூக்குதல், மல்யுத்தம், ஸ்குவாஸ், வாள்சண்டை, கோல்ப், டென்னிஸ், ரோயிங், சூட்டிங், செயிலிங், விண்ட் சர்பிங், ஹார்ஸ் போலோ போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் சர்வதேச அளவில் அல்லது தேசிய அளவில் சாதித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

ஆரம்பகட்ட தேர்வு, உடல்திறன் தேர்வு, விளையாட்டுத் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

உடற்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

குறிப்பிட்ட மாதிரியான வடிவில் ஏ4 காகிதத்தில் விண்ணப்ப படிவம் தயாரிக்க வேண்டும். அதில் விவரங்களை நிரப்பி, தேவையான சான்றுகள், புகைப்படங்கள் இணைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் பயிற்சியின் பெயர், மதிப்பெண் சதவீதம் போன்ற விவரத்தை குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களை சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : THE SECRETARY, INDIAN NAVY SPORTS CONTROL BOARD,7th Floor, Chankya Bhavan, INTEGRATED HEADQUARTERS, M MoD (NAVY), NEW DELHI 110021 விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 26-1-2020-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
Share:

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-2-2020.
  • இணைய முகவரி : www.joinindianarmy.nic.in
ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி.வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். தற்போது என்.சி.சி. 48-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 55 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1995 மற்றும் 1-7-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அத்துடன் அவர்கள் என்.சி.சி. பயிற்சியில் ‘சி’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 6-2-2020-ந் தேதியாகும்.

மேலும் இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : இளநிலை உதவியாளர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.

  • TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : இளநிலை உதவியாளர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.03.2020.
  • இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இளநிலை உதவியாளர் பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். பி.காம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்ரவரி 10-ந் தேதி விண்ணப்பப்பதிவு ஆரம்பமாகிறது. மார்ச் 9-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

TN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020 | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் .விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.

  • TN CO-OPERATIVE BANK RECRUITMENT 2020  | TN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.02.2020.
  • இணைய முகவரி : http://kpmdrb.in
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளை நிரப்புதவற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறவும்.

நிறுவனம்: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.

மொத்த காலியிடங்கள்:     80

பணியிடம்: காஞ்சிபுரம்

பணி: அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

வங்கி: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 39
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 31,650/-

பணி: ஓட்டுநர் - 05
சம்பளம்: மாதம் ரூ.11,250 - 33,075

வங்கி: நகர கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.9,200  - 25,250

வங்கி: நகர கூட்டுறவு கடன் சங்கம்
பணி: அலுவலக உதவியாளர்  - 07
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 34,700

வங்கி: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி
பணி: அலுவலக உதவியாளர் - 11
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 35,150

பணி: அலுவலக உதவியாளர்- 17
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 27,610

தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதும், இலகுரக ஓட்டுநர் பணியில் 2 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்த தேவையில்லை. மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150  செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kpmdrb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள TN Cooperative Bank Recruitment 2020 அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு அறிவிப்பு லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020
Share:

TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : மதிப்பீட்டாளர். விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.

  • TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : மதிப்பீட்டாளர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1300 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
  • இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மதிப்பீட்டாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மதிப்பீட்டாளர் பணிக்கு மட்டும் 1300 இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Share:

TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.

  • TANGEDGO RECRUITMENT 2019 | TANGEDGO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவி பொறியாளர்.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.02.2020.
  • இணைய முகவரி : https://www.tangedco.gov.in/
தமிழக மின்சார வாரியமான ‘டான்ஜெட்கோ’வில் 600 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழ்நாடு மின் வினியோக கழக நிறுவனம் சுருக்கமாக ‘டான்ஜெட்கோ’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப் படுகிறது.

உதவி என்ஜினீயர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு ஜனவரி 24-ந் தேதி முதல் விண்ணப்பதிவு தொடங்குகிறது. பிப்ரவாி 24-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இவற்றுக்கான தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.tangedco.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Share:

வேலை - கால அட்டவணை

  1. AMDER RECRUITMENT 2019 | AMDER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2020.
  2. JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.
  3. HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
  4. SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.
  5. HCMADRAS RECRUITMENT 2019 | HCMADRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.01.2020.
  6. NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2020.
  7. BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  8. RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
  9. NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2020.
  10. TNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும் ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Share:

AMDER RECRUITMENT 2019 | AMDER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2020.

  • AMDER RECRUITMENT 2019 | AMDER  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன், டிரைவர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 78 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2020.
  • இணைய முகவரி : www.amd.gov.in
அணுமின் தாதுவள ஆராய்ச்சி நிறுவனம் சுருக்கமாக AMDER என அழைக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 78 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

10-ம் வகுப்பு, டிப்ளமோ என்ஜினீயரிங், பி.இ., பி.டெக், பி.எஸ்சி. அறிவியல் படிப்புகள், எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு பணிகள் உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டணம் விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் ஜனவரி 10-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.amd.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.

  • JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : குரூப்-பி மற்றும் குரூப்-சி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 162 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2020.
  • இணைய முகவரி : www.jipmer.edu.in
ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ஜிப்மர் (JIPMER) எனப்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தில் குரூப்-பி மற்றும் குரூப்-சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நர்சிங் ஆபீசர், மெடிக்கல் சோசியல் ஒர்க்கர், ஜூனியர் என்ஜினீயர், ஸ்டெனோகிராபர் போன்ற பணியிடங்களுக்கு 162 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு 27-1-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு பெறுபவர்களுக்கான வயது வரம்பு தளர்வை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

ஜெனரல் நர்சிங், மிட்வைப் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் நர்சிங் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை சோசியல் ஒர்க் படிப்பு, சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு திறன் பெற்றவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 27-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

மற்றொரு அறிவிப்பின்படி நர்சிங் அதிகாரி, மெடிக்கல் லேபரேட்டரி, டெக்னாலஜிஸ்ட், பிசிக்கல் இன்ஸ்ட்ரக்டர் உள்ளிட்ட பணி களுக்கு 107 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜெனரல் நர்சிங், மிட்வைப், மெடிக்கல் லேப் சயின்ஸ், இளநிலை உடற்கல்வியியல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், நியூரோ டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 20-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு பிப்ரவரி 23-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவை பற்றிய விவரங்களை www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.

  • HINDUSTAN COPPER RECRUITMENT 2019 | HINDUSTAN COPPER  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 100 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
  • இணைய முகவரி : https://www.hindustancopper.com/ 
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் காப்பர் லிமிடெட். செம்புத்தாது நிறுவனமான இதில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டர், கார்பெண்டர், டிராப்ட்ஸ்மேன் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

இவை சார்ந்த பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-1-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம், குறிப்பிட்ட முகவரியை வருகிற 20-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.hindustancopper.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.

  • SBI RECRUITMENT 2019 | SBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8134 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.
  • இணைய முகவரி : www.sbi.co.in
இந்தியாவின் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). ஸ்டேட் வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. தற்போது இந்த வங்கியில் ஜூனியர் அசோசியேட் (கிளார்க்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து134 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னைக்கு 400 இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2020-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்

பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் ஜனவரி 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி-மார்ச் மாதமும், முதன்மைத் தேர்வு ஏப்ரல் 2-வது வாரமும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

SBI RECRUITMENT 2019 | SBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.01.2020.
Share:

HCMADRAS RECRUITMENT 2019 | HCMADRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.01.2020.

  • HCMADRAS RECRUITMENT 2019 | HCMADRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : மாவட்ட நீதிபதி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 32 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.01.2020.
  • இணைய முகவரி : http://www.hcmadras.tn.nic.in/
தமிழகத்தின் உயர்நீதிமன்றமான மெட்ராஸ் ஐகோர்ட், மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 32 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சட்டப்படிப்பில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருப்பதுடன், உதவி அரசு வக்கீலாக (கிரேடு1, கிரேடு2) நிலையில் குறிப்பிட்ட ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 48 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.2000 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 8-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான முதல்நிலைத் தேர்வு மார்ச் மாதமும், முதன்மைத் தேர்வு ஜூன் மாதமும், நேர்காணல் ஆகஸ்டு மாதமும் நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை http://www.hcmadras.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2020.

  • NABARD RECRUITMENT 2019 | NABARD  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஆபீஸ் அட்டன்ட் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 73 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.01.2020.
  • இணைய முகவரி : https://www.nabard.org/
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு எனப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் ஆபீஸ் அட்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவை குரூப்-சி தரத்திலான பணியிடங்களாகும். மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-12-2019-ந்தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.450 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஜனவரி 12-ந் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nabard.org/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • BECIL RECRUITMENT 2019 | BECIL  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : திறன் சார்ந்த பணியாளர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4000 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.01.2020.
  • இணைய முகவரி : www.beciljobs.com
மத்திய ஒளிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மத்திய அரசின் இந்திய ஒளிபரப்பு பொறியியல் நுட்ப நிறுவனம் சுருக்கமாக பி.இ.சி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தல் திறன் சார்ந்த பணியாளர்கள், திறன் சாராத பணியாளர்களை திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்த்து பயிற்சியளிக்கும் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. உத்தேசமாக 4 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் ஜனவரி 11-ந் தேதியாகும். 3 பேட்ஜ்களாக பயிற்சியளிக்கப்படுகிறது. ஜனவரி 11, 15, 20 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சி நடக்கிறது. விரைந்து பதிவு செய்பவர்களின் முன்னுரிமை அடிப்படையில் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். பிப்ரவரி 1-ந்தேதி முதல் பணிக்காலம் தொடங்குகிறது.

இது பற்றிய விவரங்களை www.beciljobs.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Share:

RBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.

  • RBI RECRUITMENT 2019 | RBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவியாளர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 926 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
  • இணைய முகவரி : https://www.rbi.org.in/
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணிக்கு 926 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

ரிசர்வ் வங்கி, வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுகிறது. இந்த வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலராக பணி புரிவது பலரின் கனவாகும். தற்போது இந்த வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 926 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னைக்கு 67 இடங்கள் உள்ளன. திருவனந்தபுரம், கொச்சிக்கு 20 இடங்களும், மும்பைக்கு அதிகபட்சமாக 419 இடங்களும் உள்ளன. நகரங்கள் வாரியான பணியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-12-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் 450 ரூபாய் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ரூ.50 செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 16-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஜனவரி 31-ந் தேதிக்குள் விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுக்கலாம். முதல்நிலை ஆன்லைன் தேர்வு பிப்ரவரி 14,15-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. முதன்மை ஆன்லைன் தேர்வு மார்ச் 2020-ந் தேதி நடத்தப்பட உள்ளது.

அதிகாரி பணிகள்

மற்றொரு அறிவிப்பின்படி சட்ட அதிகாரி, மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. பணி அனுபவம் அவசியம். இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, ஜனவரி 20-ந்தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Share:

NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2020.

  • NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் கம் பயர்மேன், ஸ்டைபெண்டியரி டிரெயினி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 185 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2020.
  • இணைய முகவரி : www.npcilcareers.co.in
அணுமின் நிறுவனத்தில் 185 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். (NPCIL) என அழைக்கப்படுகிறது தற்போது இந்த நிறுவனத்தில் டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் கம் பயர்மேன், ஸ்டைபெண்டியரி டிரெயினி போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 185 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஸ்டைபெண்டியரி டிரெயினி (ஆபரேட்டர் ) பணிக்கு 70 இடங்களும், ஸ்டைபெண்டியரி டிரெயினி (மெயின்டனர்) பணிக்கு 105 இடங்களும், டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் பணிக்கு 10 இடங்களும் உள்ளன.

இது பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்..

ஸ்டைபெண்டியரி டிரெயினி பணிக்கு 24 வயதுக்கு உட்பட்டவர்களும், டிரைவர் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 கணிதப் பாடப்பிரிவில் படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஸ்டைபெண்டியரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி யுடன் கனரக வாகன லைசென்சு பெற்றவர்கள் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 21-ந்தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

அப்ரண்டிஸ் பணிகள்

மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 80 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

இவை சார்ந்த பாடப் பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 21-1-2020-ந் தேதியில் 16 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Share:

TNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும் ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • TNPSC GROUP 1 RECRUITMENT 2019 | குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்.5-ல் நடைபெறும்  ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
  • பதவி : துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்   உள்ளிட்ட பணி .
  • விளம்பர அறிவிப்பு நாள் : 20.01.2020.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2020.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 05.04.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 20 முதல் ஆன்லைனில் விண் ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்டப் பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 8 வகையான உயர் பதவிகளை நேரடியாக நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்கான வருடாந் திரத் தேர்வு கால அட்டவணை யில், குரூப்-1 தேர்வு ஒரே ஆண்டுக் குகள் நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2020-ம் ஆண் டுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் என்றும் இத்தேர்வுக்கு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், தேர்வாணையத் தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஜனவரி 20-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார். காலியிடங்கள் குறித்த விவரமும் அப்போது வெளியிடப்படும்.
Share:

Popular Posts

Search This Blog

Labels

@ ALL POST (54) @ ARTICLES (1) @ LATEST NOTIFICATION (119) @ NEWS (2) @ கால அட்டவணை (13) AAI JOB (2) AFCAT JOB (1) AGRI OFFICER (1) AIESL JOB (1) AIIMS JOB (10) AIRINDIA JOB (5) AMDER JOB (1) ASRB JOB (1) ASST PROFESSOR (5) AU JOB (1) BANK JOB (21) BARC JOB (3) BECIL JOB (6) BEL JOB (2) BHEL JOB (6) BIS JOB (1) BMRC JOB (2) BOAT JOB (2) BRO JOB (1) BSF JOB (4) BU JOB (1) CCI JOB (1) CCRAS JOB (2) CCRUM JOB (1) CDAC JOB (3) CELINDIA (1) CEPTAM JOB (1) CEWACOR JOB (1) CICT JOB (1) CIMFR JOB (2) CIPET JOB (2) CISF JOB (2) COACHING CENTRE - IBPS (2) COACHING CENTRE - RRB (1) COACHING CENTRE - TNPSC (7) COACHING CENTRE - TRB PG TAMIL (1) COACHING CENTRE - TRB PG ZOOLOGY (1) COAL FIELD JOB (1) COAL INDIA JOB (1) CPCB JOB (1) CRPF (1) CSIR JOB (1) CUTN JOB (2) D (1) DAAC JOB (1) DAE JOB (1) DAVP JOB (1) DEO (1) DEVENDRAN COAL (1) DFCCIL JOB (1) DISH JOB (1) DOCTOR JOB (4) DRDO JOB (5) ECIL JOB (1) EIL job (1) ENGINEERS INDIA JOB (1) ENGINEERS JOB (1) EPF JOB (2) ESI JOB (2) FACT (2) FCI JOB (1) FORESTER (1) FSSAI JOB (1) GAIL JOB (2) GRSE JOB (1) GSI JOB (1) GUEST LECTURER (1) HAL JOB (1) HECLTD JOB (1) HIGH COURT JOB (2) HINDUSTAN COPPER JOB (4) HURL JOB (1) IBPS JOB (4) ICCR JOB (1) ICF JOB (2) ICMR JOB (2) ICSI JOB (1) IDBI JOB (2) IGCAR JOB (1) IIT JOB (2) IMD JOB (1) INDIA SEEDS JOB (1) INDIAN ARMY JOB (16) INDIAN COAST GUARD (7) INDIAN MUSEUM JOB (1) INDIAN NAVY JOB (7) IOC JOB (2) IOCL JOB (3) IRCTC JOB (1) ISRO JOB (1) ITBP JOB (2) ITI JOB (1) ITPOLICE (2) JIPMER JOB (2) JOB DATE (1) JUNIOR ASST (1) KVIC JOB (1) KVK (1) LIC JOB (3) MADRAS UNIVERSITY JOB (3) MANAGER JOB (1) MECON JOB (1) METRO JOB (2) MHC JOB (1) MKU JOB (1) MOIL JOB (1) MRB JOB (4) MRPL JOB (3) NABARD JOB (4) NAVODAYA JOB (1) NCLCIL JOB (2) NESAC JOB (1) NFL JOB (1) NHIDCL job (1) NIFT JOB (1) NIOS JOB (1) NIRT JOB (1) NIT JOB (7) NITC JOB (1) NITH JOB (1) NITI JOB (1) NITJ JOB (1) NITK JOB (1) NITRKL JOB (1) NITT JOB (1) NLC JOB (3) NMDC JOB (1) NPCIL (5) NPL JOB (1) NTCLTD JOB (1) NTP JOB (2) NTPC JOB (1) NTRO JOB (1) NURSE (4) NVS JOB (1) NYKS JOB (3) OIL-INDIA JOB (1) OMCAMPOWER JOB (1) ONGC JOB (6) PDILIN JOB (1) PHARMACIST (2) PNB JOB (1) POLICE JOB (2) PRASARBHARATI JOB (1) PRIVATE JOB (1) PROJECT ASSOCIATE (1) PTA JOB (1) RAILWAY JOB (6) RBI JOB (5) RMLH JOB (1) RRB (4) RRC JOB (1) S.I JOB (1) SAC JOB (1) SAIL JOB (6) SBI JOB (8) SCIENTIST JOB (1) SEBI JOB (1) SECL JOB (2) SHIPYARD JOB (5) SIPCOT JOB (1) SJVN JOB (2) SPMCIL JOB (1) SSC JOB (8) TANCEM JOB (3) TANGEDGO JOB (4) TASMAC JOB (1) TCIL JOB (2) TEACHERS JOB (1) THDC JOB (1) TIIC JOB (1) TMC JOB (2) TN COURT JOB (8) TN FOREST (2) TN HEALTH JOB (1) TNCOOPSRB JOB (3) TNEB JOB (5) TNFUSRC JOB (1) TNJFU JOB (1) TNNLU JOB (1) TNPCB JOB (4) TNPL JOB (2) TNPOST JOB (3) TNPSC JOB (31) TNRD JOB (1) TNSAMB (1) TNUSRB JOB (2) TRB (4) TRIFED JOB (1) TVU JOB (1) UGC JOB (1) UIIC JOB (1) UNIVERSITY JOB (2) UPSC JOB (13) VC (1) VCRC JOB (1) VOC PORT JOB (1) VSSC JOB (2) செல்போன் செயலி (1) வேலைவாய்ப்பு முகாம் (1)
Back to TOP

Get Latest Updates: Follow Us On WhatsApp

Contact Form

Name

Email *

Message *

Labels

Blog Archive

Recent Posts

Pages

பதிப்புரிமை © 2009-2024 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.