- NPCIL RECRUITMENT 2019 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் கம் பயர்மேன், ஸ்டைபெண்டியரி டிரெயினி உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 185 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2020.
- இணைய முகவரி : www.npcilcareers.co.in
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். (NPCIL) என அழைக்கப்படுகிறது தற்போது இந்த நிறுவனத்தில் டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் கம் பயர்மேன், ஸ்டைபெண்டியரி டிரெயினி போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 185 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஸ்டைபெண்டியரி டிரெயினி (ஆபரேட்டர் ) பணிக்கு 70 இடங்களும், ஸ்டைபெண்டியரி டிரெயினி (மெயின்டனர்) பணிக்கு 105 இடங்களும், டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் பணிக்கு 10 இடங்களும் உள்ளன.
இது பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்..
ஸ்டைபெண்டியரி டிரெயினி பணிக்கு 24 வயதுக்கு உட்பட்டவர்களும், டிரைவர் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 கணிதப் பாடப்பிரிவில் படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஸ்டைபெண்டியரி டிரெயினி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி யுடன் கனரக வாகன லைசென்சு பெற்றவர்கள் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 21-ந்தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
அப்ரண்டிஸ் பணிகள்
மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 80 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
இவை சார்ந்த பாடப் பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 21-1-2020-ந் தேதியில் 16 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இவை பற்றிய விரிவான விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment