- TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : அசிஸ்டெண்ட் இன்ஜினியர் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 475
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019
- இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழக அரசின் கீழுள்ள பல்வேறு துறைகளில் பணிபுரிவதற்கான ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
(ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள்)
அசிஸ்டெண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர்
அசிஸ்டெண்ட் இன்ஜினியர்
ஜூனியர் ஆர்க்கிடெக்ட்
காலியிடங்கள்:
அசிஸ்டெண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் - 10
அசிஸ்டெண்ட் இன்ஜினியர் - 450
ஜூனியர் ஆர்க்கிடெக்ட் - 15
மொத்தம் = 475 காலியிடங்கள்
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 29.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2019
வங்கி மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.06.2019
தேர்வு நடைபெறும் தேதிகள்: தாள்-1: 10.08.2019 (காலை)
தாள்-2: 10.08.2019 (மதியம்)
வயது வரம்பு: (01.07.2019 தேதிக்குள்) அசிஸ்டெண்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் என்ற பணிக்கு, அதிகபட்ச வயது வரம்பாக 39 வயதும், மற்ற பணிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதும் உடையவர்களாக இருத்தல் அவசியம்.
கட்டணம்:
விண்ணப்ப பதிவு கட்டணம் - ரூ.150
தேர்வுக்கட்டணம் - ரூ.200
குறிப்பு:
ஆன்லைன் மற்றும் வங்கியில் மட்டுமே இதற்கான தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, பி.எஸ்சி (அக்ரிகல்சர்) / பி.இ / பி.டெக் (அக்ரிகல்சர், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்டஸ்ரியல், ஆர்க்கிடெக்சர், கெமிக்கல், ஆட்டோமொபைல்) போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள், தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://tnpscexams.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு முறை:
1. எழுத்துத் தேர்வு (தாள்-1 & தாள்-2)
2. நேர்முகத் தேர்வு மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற,
http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment