உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Monday, November 11, 2019

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-11-2019.

 • SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : குரூப்-பி, குரூப்-சி அதிகாரி உள்ளிட்ட பணி .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-11-2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 00.09.2019 .
 • இணைய முகவரி : www.ssc.nic.in

ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) அமைப்பு மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்பும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய வருவாய்த்துறை, பாராளுமன்ற செயலக சேவை, ரெயில்வே துறை, உள்துறை அமைச்சகம், நுண்ணறிவு பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குரூப்-பி, குரூப்-சி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வை அறிவித்து உள்ளது. இதற்கான காலியிட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பற்றிய அறிவிப்பை விரைவில் எஸ்.எஸ்.சி. வெளியிட உள்ளது.

‘காம்பைன்டு கிராஜூவேட் லெவல் எக்சாம்-2019 (டையர்-1)’ எனப்படும் தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி முதல்11 -ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 1-8-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பிளஸ்-2 வகுப்பில் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்க்கலாம்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு (டையர்-1, டையர் -2), விவரித்தல் தேர்வு (டையர்-3), திறமைத் தேர்வு, (டையர்-4) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு உடல்தகுதி பரிசோதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். 25-11-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-11-2019.

 • IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : சிறப்பு அதிகாரி .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1163 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-11-2019.
 • இணைய முகவரி : www.ibps.in

பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணி களுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1163 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு 9-வது சிறப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்கேல்-1 தரத்திலான 1163 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் வருமாறு: ஐ.டி. ஆபீசர் - 76 பேர், அக்ரிகல்சரல் பீல்டு ஆபீசர் 670 பேர், ராஷ்டிரபாஷா அதிகாரி - 27 பேர், சட்ட அதிகாரி - 60 பேர், எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி- 20 பேர், மார்க்கெட்டிங் அதிகாரி 310 பேர்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-11-2019 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவு படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஐ.டி. அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். அக்ரி கல்சர், ஹார்ட்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங், பிஸ்ஸரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் கோஆபரேசன், கோஆபரேசன் அன்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பட்டப்படிப்புகளை படித்தவர்கள் அக்ரிகல்சர் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் ராஷ்டிரபாஷா அதிகாரி பணிக்கும், இதேபோல சட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அது சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு நிலைகளாக நடத்தப்படுகிறது. அதன் மூலம் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளில் பணிவாய்ப்பை பெறலாம்.

கட்டணம்:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 26-11-2019

முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாட்கள் : 28-12-2019, 29-12-2019

முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : 25-1-2020

நேர்காணல் நடைபெறும் காலம் : பிப்ரவரி 2020

மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.

 • TNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.
 • தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .
 • இணைய முகவரி : www.tncoopsrb.in

தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். நவம்பர் 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 29 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்வு முடிவு வெளியான பின்னர் நேர்காணல் நாள் அறிவிக்கப்படும். இது பற்றிய விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டு உள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 • TNFUSRC RECRUITMENT 2019 | TNFUSRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : வன காவலர், வனகாவல் (டிரைவர்) .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 320 .
 • இணைய முகவரி : www.forests.tn.gov.in

தமிழக வனத்துறை பணிகள் தேர்வாணைய கமிட்டி வனத்துறை பணிகளுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி வன காவலர், வனகாவல் (டிரைவர்) பணியிடங்களுக்கு 320 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 227 இடங்கள் வனக்காவலர் பணிக்கும், 93 பணியிடங்கள் டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கான வனகாவலர் பணிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டண விவரம், உடல்தகுதி பற்றிய முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு அறிவிப்பு வெளியான பின்பு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, November 4, 2019

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.

 • MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
 • பதவி : கிராம சுகாதார செவிலியர் .
 • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 .
 • விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.
 • இணைய முகவரி : www.mrb.tn.gov.in

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,234 கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு சென்னை தமிழகத்தில் 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத் துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு கோரிக் கைகளுக்கு அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். இந்நிலையில் அரசு மருத்துவ மனைகளில் டாக்டர்கள், செவிலியர் கள் உள்ளிட்டோர் மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தியா வில் முதன்முறையாக 77 பிசியோ தெரப்பிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வை சென்னையில் 5 இடங் களில் தேர்வு வாரியம் நடத்தியது. திருநங்கைகள் பங்கேற்பு இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். மதுரை மற்றும் விழுப் புரத்தைச் சேர்ந்த 2 திருநங்கைகள் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் கிராம சுகாதார செவிலியர்கள் தேர்வு செய்யப் படவுள்ளனர். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தளத்தை பார்க்கலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE