உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Monday, November 4, 2019

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கிராம சுகாதார செவிலியர் . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.

  • MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கிராம சுகாதார செவிலியர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1,234 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.11.2019.
  • இணைய முகவரி : www.mrb.tn.gov.in

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,234 கிராம சுகாதார செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு  சென்னை தமிழகத்தில் 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத் துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு கோரிக் கைகளுக்கு அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதில் நோயாளிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். இந்நிலையில் அரசு மருத்துவ மனைகளில் டாக்டர்கள், செவிலியர் கள் உள்ளிட்டோர் மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இந்தியா வில் முதன்முறையாக 77 பிசியோ தெரப்பிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வை சென்னையில் 5 இடங் களில் தேர்வு வாரியம் நடத்தியது. திருநங்கைகள் பங்கேற்பு இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். மதுரை மற்றும் விழுப் புரத்தைச் சேர்ந்த 2 திருநங்கைகள் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், 1,234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் கிராம சுகாதார செவிலியர்கள் தேர்வு செய்யப் படவுள்ளனர். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தளத்தை பார்க்கலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment