பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் செக்யூரிட்டி கார்டு பணிக்கு மட்டும் 73 இடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர்கள் செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கும், பட்டதாரிகள் உதவி செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6-ந் தேதியாகும். இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.barc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Home »
@ ALL POST
,
@ LATEST NOTIFICATION
,
BARC JOB
» பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் செக்யூரிட்டி கார்டு பணி
No comments:
Post a Comment