Sunday, March 15, 2020

மத்திய அரசு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள்

  • ரெயில் என்ஜின் நிறுவனம், உருக்கு நிறுவனம், ராணுவ நிறுவனம் போன்றவற்றில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்...

ரெயில் என்ஜின் நிறுவனம்

மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படுகிறது ‘டீசல் லோகோ மாடனிசேசன் ஒர்க்ஸ்’. ரெயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனமான இது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் செயல்படுகிறது.

தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர், வெல்டர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 182 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பேருக்கு பணி வாய்ப்பு என்பதை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு படித்தவர்கள் வெல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வெல்டர் பணிக்கு 22 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 26-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஏப்ரல் 20-ந்தேதி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் மே அல்லது ஜூன் மாதம் முதல் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.

இது பற்றிய விவரத்தை https://dmw.indianrailways.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts