- TNEB RECRUITMENT 2020 | TANGEDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உதவி பொறியாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
- இணைய முகவரி : www.tangedco.gov.in
மின்சார வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக மின்வாரியத்தில் 600 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாளாகும். தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் மின்னியல்-400, இயந்திரவியல்-125, கட்டடவியல்-75 என மொத்தம் 600 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எனினும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு விதிப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். கல்வித் தகுதியாக பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், 10, 12-ம் வகுப்பு அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment