யூபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் இலவசப் பயிற்சியை சங்கர் ஐஏஎஸ் அகாடமி வழங்கவுள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சகம் மற்றும் சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இப்பயிற்சியை வழங்க உள்ளன. மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் மூலம் யூபிஎஸ்சி தேர்வுக்கு 50 பேரும், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு 50 பேரும் தேர்வு செய்யப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி காலத்தில் மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்கும். சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மூலம் யூபிஎஸ்சி தேர்வுக்கு 25 மாணவ, மாணவியர் இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட 2 முறையிலான இலவச பயிற்சிகளுக்கும் நடப்பு நிகழ்வுகள், கட்டுரை எழுதுதல் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இலவச பயிற்சி தேர்வுக்கு இன்றுமுதல் (ஜூன் 13) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 28 கடைசி தேதி. எழுத்துத் தேர்வு ஜூன் 30-ம் தேதி நடைபெறும். இத்தேர்வின் முடிவுகள் ஜூலை 9-ம் தேதி வெளியிடப்படும். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இலவச பயிற்சி தேர்வுக்கு www.shankariasacademy.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 7339670333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி எழுத்துத் தேர்வுக்கான தேதி மற்றும் நேர்முகத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு சங்கர் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments