- BIS RECRUITMENT 2020 | BIS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
‘பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் ((BIS)’ என்பது இந்திய தர நிர்ணய நிறுவனமாகும். இந்திய தயாரிப்பு பொருட்களின் எடை மற்றும் தரத்தை உறுதி மற்றும் ஆய்வு செய்யும் அமைப்பாக இது விளங்குகிறது.
தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்சியாளர் (கிரேடு-பி) பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் கேட் தேர்வு அடிப்படையில் என்ஜினீயரிங்- தொழில்நுட்ப பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகாம், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், புட் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், பயோடெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல், பயோ மெடிக்கல் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31-3-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி :
பி.இ., பி.டெக் படிப்புடன் கேட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளுக்கான கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இவர்களைத் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 31-ந் தேதியில் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bis.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment