- NCLCIL RECRUITMENT 2020 | NCLCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ‘நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்’. வடக்கு பிராந்திய நிலக்கரி நிறுவனங்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது டிராக்லைன் ஆபரேட்டர், டோஸர் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 307 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக டம்பர் ஆபரேட்டர் பணிக்கு 167 இடங்களும், டோஸர் ஆபரேட்டர் பணிக்கு 48 இடங்களும், ஷவல் ஆபரேட்டர் பணிக்கு 28 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிக்குமான காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 30-3-2020-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிரைவிங் லைசென்ஸ் பெற்றவர்கள் டிராக்லைன் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு டிரைவிங் லைசென்சு அவசியம்.
கட்டணம் :
பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் ஆகியோர் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், துறை பணியாளர்கள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://nclcil.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment