- CIPET RECRUITMENT 2020 | CIPET அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.03.2020.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில் நுட்ப மையம் மத்திய கல்வி- ஆராய்ச்சி நிறுவனமாகும். தற்போது இந்த கல்வி மையத்தில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 241 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
விரிவுரையாளர் பணிக்கு 46 இடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 90 இடங்களும், பகல்டி ஆசிரியர் பணிக்கு 60 இடங்களும் உள்ளன. இவை தவிர நூலகர், கஸ்டமர் ரிலேசன்சிப் ஆபீசர், உதவி பிளேஸ்மென்ட் ஆபீசர், லைபிரரி இன்ஸ்ட்ரக்டர், பிசிகல் டிரெயினிங் இன்ஸ்ட்ரக்டர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...
வயது வரம்பு :
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. பகல்டி மற்றும் விரிவுரையாளர் பணிக்கு 65 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளேஸ்மென்ட் அதிகாரி பணிக்கு 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி :
பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., லைபிரரி சயின்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணி உள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு படித்து பணி அனுபவம் உள்ளவர்களுக்கு பகல்டி பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 20-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cipet.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment