- INDIAN ARMY RECRUITMENT 2020 | INDIAN ARMY அறிவித்துள்ள ஆள்சேர்ப்பு முகாம் அறிவிப்பு.
தமிழகத்தைச் சேர்ந்த ஈரோடு, தேனி, மதுரை, தி்ண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் நேரடியாக பங்கேற்கலாம். பல்வேறு பிரிவுகளில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
8,10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க முடியும். அவர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். கல்விச் சான்றுகள் மற்றும் அவசியமான சான்றுகளுடன் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
இதற்காக இணையதளம் வழியாக பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச் 21-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 19-ந்தேதி வரை இந்த பெயர்ப்பதிவு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
நேர்காணலுக்கு அழைக்கப்படும் நாளில் நேரில் சென்று, திறன்களை நிரூபித்து ராணுவ வீரராகலாம். உடல்திறன் சோதனைகள், மருத்துவ பரிசோதனைகள், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment