- அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி இளைஞர்கள் பதிவு செய்து பயன்பெற அரசு அழைப்பு சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
- அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவை யான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந் தோறும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வபயிலும் வட்டங்கள் செயல்பட்டு வரு கின்றன.
- இங்கு டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இப்பயிற்சி வகுப்புகளில் தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள், புத்தகங்கள், நாளிதழ்கள், சஞ்சிகை கள் ஆகியவை பராமரிக்கப் படுவதுடன், மாதிரித் தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள் ஆகியவை யும் இலவசமாக நடத்தப்படு கின்றன.
- தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதவர் களும், தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர் களும் பயன்பெறுவதற்காக தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் மெய்நிகர் கற்றல் வலைதளம் (http://tamilnaducareerservices.tn.gov.in) செயல்பட்டு வருகிறது.
- இந்த இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப் -7பி, 8, டிஎன்யுஎஸ்ஆர்பி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான குறிப்பு கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும், இப்பாடக் குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
- இந்த வலைதளத்தை செல் போன் மூலமாகப் பயன்படுத் துவதற்காக ஒரு செல்போன் செய லியும் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை (http://tamilnaducareerservices.tn.gov.in) தர விறக்கம் செய்து தமது செல் போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் இந்த மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஏற்றப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடக் குறிப்புகளைத் தத்தமது செல்பேசியிலேயே பதிவுதாரர்கள் படிக்க முடியும்.
- எனவே, அரசுத் துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் இந்த இணைய தளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து இந்த வலைதளத் தின் சேவைகளை இலவசமாக பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Home »
செல்போன் செயலி
» அரசுத் துறையில் சேர விரும்புவோர் பயிற்சிபெற உதவும் செல்போன் செயலி
No comments:
Post a Comment