TNPOST RECRUITMENT 2019 |
TNPOST அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4,442 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019.
இணைய முகவரி : www.tamilnadupost.nic.in
தமிழக தபால் வட்டத்தில் 4,442 பணிகள்
10-ம் வகுப்பு படிப்பு தகுதி
தமிழக தபால் வட்டத்தில், தபால் அதிகாரி மற்றும் தபால்காரர் உள்ளிட்ட பணிகளுக்கு 4 ஆயிரத்து 442 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
தமிழக தபால் வட்டத்தில், கிராம தபால் சேவை பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிளை தபால் அதிகாரி, உதவி தபால் அதிகாரி, தபால்காரர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 4 ஆயிரத்து 442 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தபால் கிளை வாரியான பணியிட விவரம் முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 15-3-2019-ந் தேதியில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ஆகியோருக்கும் -மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், பிராந்திய மொழியறிவும் பெற்றவராக இருக்க வேண்டும்.
கட்டணம்
பொது, ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற ஏப்ரல் 15-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.tamilnadupost.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments