- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது.
- மொத்தம் 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு மட்டும் 89 காலியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
- ஹோம்சயின்ஸ், சைகாலஜி, சோசியாலஜி, சைல்டு டெவலப்மென்ட், புட் அண்ட் நியூட்ரிசியன், சோசியல் ஒர்க், ரெகபில்லிடேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- நியூட்ரீசியன், ஹோம்சயின்ஸ் பட்டப்படிப்புடன், ரூரல் சர்வீஸ் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- இணையதளம் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் செப்டம்பர் 11-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 16,17-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
- விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
Home »
@ LATEST NOTIFICATION
,
TNPSC JOB
» டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணி
டி.என்.பி.எஸ்.சி. உதவி இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment