RAILWAY RECRUITMENT 2019 |
RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 103769 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019.
இணைய முகவரி : www.indianrailways.gov.in
10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ரெயில்வே துறையில் 1 லட்சம் பணிகள்
ரெயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769 ‘குரூப்-டி’ பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
ரெயில்வே ஆட்தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) சமீபத்தில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. ஒவ்வொரு பிரிவு வாரியான பணியிட விவரம் அடுத்தடுத்து வெளியாகி வந்தது.
தற்போது அசிஸ்டன்ட் பாயின்ட்ஸ்மேன், அசிஸ்டன்ட் பிரிட்ஜ், டிராக் மெயின்டனர் உள்ளிட்ட ‘குரூப்-டி’ பணிகளுக்கான காலியிட விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 பேர் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப் படுகிறார்கள்.
16 மண்டலங்கள் வாரியாக பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு ரெயில்வே மற்றும் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் மட்டும் 9 ஆயிரத்து 579 பணியிடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 4 ஆயிரத்து 363 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 2 ஆயிரத்து 118 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 1353 பணியிடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 787 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 958 பணியிடங்களும் உள்ளன. இதர மண்டலங்களில் உள்ள பணியிடங்களையும், ஒவ்வொரு பணி வாரியான காலியிட விவரத்தையும் முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்....
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 33 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனு மதிக்கப்படும்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மற்றவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் குறிப்பிட்ட தொகை கணினி தேர்வின்போது திரும்ப வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஏப்ரல் 12-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். கட்டணம் இணைய தளம் வழியாக ஏப்ரல் 23-ந் தேதி வரையும், வங்கி வழியாக ஏப்ரல் 18-ந் தேதி வரையும் கட்டணம் செலுத்தலாம். ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளாக திருத்தங்கள் செய்ய முடியும். இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி.) செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.indianrailways.gov.in/ மற்றும் www.rrbchennai.gov.in ஆகிய இணையதள பக்கங்களை பார்க்கலாம்.
0 Comments