Ad Code

NTCLTD RECRUITMENT 2019 | NTCLTD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 109 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.ntcltd.org

NTCLTD RECRUITMENT 2019 | NTCLTD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 109 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.04.2019. இணைய முகவரி : www.ntcltd.org
மத்திய துணி நிறுவனத்தில் அதிகாரி வேலை மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேசன் லிமிடெட். மத்திய ஜவுளி நிறுவனமான இதில் தற்போது ஜெனரல் மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், சீனியர் மேனேஜர் போன்ற அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம், நிதி, எச்.ஆர்., நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் அதிகாரி பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 109 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 35 முதல் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. டெக்ஸ்டைல் என்ஜினீரியங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.டபுள்யு., சட்டப் படிப்பு போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான அப்ளிகேசனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் ரூ.300 கட்டண டி.டி. மற்றும் புகைப்படம் உள்ளிட்ட சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் 12-4-2019-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.ntcltd.org என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code