AIRINDIA RECRUITMENT 2019 |
AIRINDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 160 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019.
இணைய முகவரி : www.airindia.in
விமான துணை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.). தற்போது இந்த நிறுவனத்தில் ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பிளஸ்-2 படிப்புடன், குறிப்பிட்ட ரக விமானங்களை இயக்கும் லைசென்சு பெற்றவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை நேரடி நேர் காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் புதுடெல்லியில் நடக்கிறது. தேவையான சான்றுகளின் அசல் மற்றும் நகல்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
அப்ரண்டிஸ் பயிற்சி
இதேபோல இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி சேர்க்கையில் 80 பேர் சேர்க்கப்படுகிறார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், புரொடக்சன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
பட்டதாரிகள் 20 பேரும், டிப்ளமோ படித்தவர்கள் 60 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 25-ந் தேதி கடைசி நாளாகும். இவை பற்றிய விவரங்களை www.airindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
ஏஐ.ஏ.டி.எஸ்.எல்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது செக்யூரிட்டி ஏஜெண்ட் பணிக்கு ஆண், பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ளன. மொத்தம் 68 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பட்டப்படிப்புடன், பி.சி.ஏ.எஸ். பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி பரிசோதிக்கப்படும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி உயரம் உள்ளிட்ட உடல் அளவு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது பரிசோதனையின் மூலம் சோதித்து அறியப்படும்.
28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.airindia.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம், தபால் வழியாக அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் மார்ச் 25-ந் தேதியாகும்.
Home »
AIRINDIA JOB
» AIRINDIA RECRUITMENT 2019 | AIRINDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 160 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.airindia.in
No comments:
Post a Comment