BSF RECRUITMENT 2019 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1826 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.02.2019.
எல்லைக் காவல் படையில் 1826 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்திய துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று பி.எஸ்.எப். எனப்படும் எல்லைக் காவல் படை. இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த படைப்பிரிவில் தற்போது கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 1763 பேர் தேர்வுசெய்யப்படு கிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 934 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 398 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 277 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 152 இடங்களும், பெண்களுக்கு 2 இடங்களும் உள்ளன.
டெய்லர், சமையல்காரர், முடிதிருத்துனர், சுகாதார பணியாளர், பெயிண்டர், தச்சர், செருப்புத் தைப்பவர், டபுள்யு/சி மற்றும் டபுள்யு/எம்., டிராப்ட்ஸ்மேன் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்...
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைபவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பதுடன், பணியிடங்கள் உள்ள பிரிவில் 2 ஆண்டு பணிஅனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், பணியிடங்கள் உள்ள பிரிவில் ஓராண்டு ஐ.டி.ஐ. படிப்பும், ஓராண்டு பணி அனுபவமும் பெற்றவர்கள் அல்லது 2 ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாவர்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் ( http://bsf.nic.in/ )வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜனவரி 25-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments