ONGC RECRUITMENT 2019 |
ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : அக்கவுண்டன்ட், அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 653 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.03.2019.
இணைய முகவரி : www.ongcapprentices.co.in
இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 4,014 பயிற்சிப் பணிகள்
ஓ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயு நிறுவனத்தில் 4 ஆயிரத்து 14 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ONGC) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தெற்கு மண்டலத்தில் மட்டும் 653 பணியிடங்கள் உள்ளன.
அக்கவுண்டன்ட், அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், மெஷினிஸ்ட், சர்வேயர், வெல்டர், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அசிஸ்டன்ட் என்ஜினீயர் உள்ளிட்ட 22 பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பி.எஸ்.சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள், பி.ஏ., பி.பி.ஏ., வணிகவியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 28-ந் தேதி வரை இணையதள விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். பார்ட்-1, பார்ட்-2 என்ற இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ongcapprentices.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்..
Home »
ONGC JOB
» ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்டன்ட், அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 653 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.03.2019. இணைய முகவரி : www.ongcapprentices.co.in
No comments:
Post a Comment