BANK RECRUITMENT 2019 |
UBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : கிரெடிட் அதிகாரி உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 181 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019.
இணைய முகவரி : www.unionbankofindia.co.in
பிரபல வங்கிகளில் அதிகாரி பணியிடங்கள்
2 பிரபல வங்கிகளில் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 181 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம் : கிரெடிட் அதிகாரி - 122 இடங்கள், டிரெஸ்ஸரி ஆபீசர் - 15, பாரக்ஸ் ஆபீசர் - 18, செக்யூரிட்டி ஆபீசர் - 19, எக்கனாமிஸ்ட் - 6, தீயணைப்பு அதிகாரி - 1.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 40 வயதுடையவர்களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி
முதுநிலை பொருளாதாரம், பி.இ. பயர் என்ஜினீயரிங், எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எப்.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 29-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.unionbankofindia.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
Home »
BANK JOB
» BANK RECRUITMENT 2019 | UBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிரெடிட் அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 181 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.03.2019. இணைய முகவரி : www.unionbankofindia.co.in பிரபல வங்கிகளில் அதிகாரி பணியிடங்கள்
No comments:
Post a Comment