செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் சிறப்பு பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவஹர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இத்தேர்வு மூலம் 6,491 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப்-4 தேர்வுக்கு செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
23-ம் தேதி அறிமுக வகுப்பு
இதுதொடர்பான இலவச அறிமுக வகுப்பு வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 86680-38347 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். அரசு வேலைகளுக்கான தேர்வுகளை எழுதும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிகழ்ச்சி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணிக்குள் நேரில் வந்தும் பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Home »
COACHING CENTRE - TNPSC
» டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment