Ticker

Ad Code

சிவந்தி அகாடமியில் ரெயில்வே தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 20-ந்தேதி தொடங்குகிறது

ரெயில்வே குரூப்-டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. ரெயில்வே துறை நடத்தும் டிராக்மேன், ஹெல்பர் போன்ற குரூப்-டி காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. குரூப்-டி எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெறுகிறது. மேற்கண்ட தேர்வுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். காலை 9.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.6,000 ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது. பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் தங்கும் வசதி, உணவு கட்டணம் ரூ.4,000-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 20-ந்தேதி அன்று நேரில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் திருச்செந்தூர் தூத்துக்குடி ரோட்டில் உள்ள சிவந்தி அகாடமியில் 20-ந்தேதி காலை 9 மணிக்கு பயிற்சி கட்டணம் ரூ.6,000-ஐ நேரில் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998 என்ற தொலைபேசி எண்ணிலும், 94420 55243, 86829 85148 ஆகிய அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code