வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடர்பான ஆலோச னைகள் வழங்க சென்னையில் சிறப்பு வழிகாட்டு மையம் இயங்கி வருவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை வழங்கி உதவி செய்வததற்காக தமிழக அரசால் மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம் சென்னை கிண்டியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப் பட்டது. இளைஞர்களுக்கு உளவியல் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகள் வழங்குவது போன்றவை இம்மையத்தின் தலையாய பணிகள் ஆகும்.
மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு, சுயதொழில் தொடங்கும் வகையில் தொழில்முனைவோர் திறனை ஊக்குவித்தல், வேலையளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு, வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக எஸ்எம்எம் மூலம் தகவல் அனுப்புதல் போன்ற பணிகளையும் இம்மையம் செய்து வருகிறது. இந்த மையத் தில் உள்ள உளவியல் ஆலோசகர்கள் திறன் மதிப்பீடு, உளவியல் தேர்வு நடத்தி இளைஞர் களின் அறிவுத்திறன், ஆர்வம் ஆகியவற்றை கண்டறிந்து அதற்கேற்ப தொழில் மற்றும் மேற்படிப்புக்கும் வழிகாட்டுவார்கள். மேலும், இங்கு மத்திய-மாநில அரசுகளின் போட்டித்தேர்வு களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும், மாதிரித்தேர்வுகளும் மாதிரி நேர்காணல்களும் நடத்தப்படுகின்றன. இந்த மையம் கீழ்க்காணும் முகவரியில் செயல்பட்டு வருகிறது.
மாநில தொழில்நெறி வழிகாட்டு மையம், ஏ-28, முதல் மாடி, டான்சி தலைமை அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. தொலைபேசி எண்கள்: 044-22500134, 29530134. மின்னஞ்சல் முகவரி: statecareercentre@gmail.com
இந்த மையம் அனைத்து அரசு வேலை நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். வேலை தேடும் இளைஞர்கள் இந்த சிறப்பு வழிகாட்டு மையத்தில் வழங்கப்படும் சேவைகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள்.
இவ்வாறு ஜோதி நிர்மலா சாமி கூறியுள்ளார்.
Home »
COACHING CENTRE - TNPSC
» வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க சென்னையில் சிறப்பு வழிகாட்டு மையம் மாநில வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையர் தகவல்
வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க சென்னையில் சிறப்பு வழிகாட்டு மையம் மாநில வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையர் தகவல்
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment