அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக அந்த மையத்தின் வடசென்னை ஒருங் கிணைப்பாளர் என்.வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இளநிலை உதவியாளர், தட்டச் சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 6,491 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். இதற்கு ஜூலை 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலைவாய்ப்பு உறுதி என்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும்.
இத்தேர்வுக்கு டாக்டர் அம்பேத் கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்ளன. இதில், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஏனைய பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இதற்கான பயிற்சி வகுப்புகள் பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு கச்சாலீஸ்வரர் கோயில் அக்ர ஹாரம் சிஐடியு அலுவலக கட்டிடத் தில் வாரம்தோறும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும். வகுப்புகள் வரும் சனிக் கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றன. பயிற்சி பெற விரும்புவோர் பின்வரும் ஒருங்கிணைப்பாளர் களை செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பாலாஜி - 98847 47217, மோகன் - 93449 51475, வாசுதேவன் - 94446 41712.
பயிற்சி வகுப்புக்கு வரும் பொழுது மார்பளவு போட்டோவும், குருப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலையும் தவறாமல் கொண்டு வர வேண்டும்.
Facebook
Google
Twitter
EmailShare
© 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
Home »
COACHING CENTRE - TNPSC
» டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment