- BARC RECRUITMENT 2019 | BARC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : ஒர்க் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 74
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.07.2019
- இணைய முகவரி : http://www.barc.gov.in
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், சுருக்கமாக பி.ஏ. ஆர்.சி. (BARC) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஒர்க் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ஜூலை 1-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.barc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment