Sunday, June 9, 2019

MECON RECRUITMENT 2019 | MECON அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : அக்கவுண்டன்ட், சேப்டி ஆபீசர், புராஜெக்ட் என்ஜினீயர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 205 விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019

  • MECON RECRUITMENT 2019 | MECON அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : அக்கவுண்டன்ட், சேப்டி ஆபீசர், புராஜெக்ட் என்ஜினீயர் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 205
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019
  • இணைய முகவரி : www.meconlimited.co.in

மத்திய உருக்குத் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று மெக்கான். மினிரத்னா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனத்தில் தற்போது பொறியியல் மற்றும் பொறியியல் சாராத பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
எக்சிகியூட்டிவ், அக்கவுண்டன்ட், சேப்டி ஆபீசர், புராஜெக்ட் என்ஜினீயர், ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு தகுதி வேறுபடுகிறது. 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சம் 45 வயதுடையவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் தகுதியாக கோரப்பட்டு உள்ளது. சிவில், மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கணிசமான பணியிடங்கள் உள்ளன. பிசியோதெரபி, ரேடியோகிராபி டிப்ளமோ படிப்புகள், எம்.பி.ஏ. மற்றும் பிஸினஸ் மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.meconlimited.co.in. என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts