- AAI RECRUITMENT 2019 | AAI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கிரீனர் பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 176
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.06.2019
- இணைய முகவரி : https://aaiclas-ecom.org/Live/Career.aspx
இந்திய விமான ஆணைய நிறுவனமான ஏ.ஏ.ஐ.- யின் கீழ் செயல்படும் துணை நிறுவனம், ‘கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்’. தற்போது இந்த நிறுவனத்தின் சென்னை விமான தளத்தில் செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கிரீனர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மொத்தம் 176 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 95 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மண்டல மொழியறிவு பெற்றிருக்க வேண்டும். விமான போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அடிப்படை சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் 1-6-2019-ந் தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உயரத்தில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
விமானதள பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் பெற்றவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். மற்றவர்கள் உடல் உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பம் புதுடெல்லியில் உள்ள கார்கோ லாஜிஸ்டிக்ஸ் தலைமை நிறுவன முகவரியை சென்றடைய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://aaiclas-ecom.org/Live/Career.aspx என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment