- NITC RECRUITMENT 2019 | NITC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : தொழில்நுட்ப அலுவலர் பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 129
- நேர்காணல் நாள் : 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை
- இணைய முகவரி : http://nitc.ac.in/
தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் (என்.ஐ.டி.) நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது கேரளமாநிலம் கோழிக்கோட்டில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பி.எஸ்சி. அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் தேவை. விண்ணப்பதாரர்கள் 1-6-2019-ந் தேதியில் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்க இருக்கிறது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்பதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான சான்றுகளுடன் அந்தந்த பணிக்கான நேர்காணல் தேதியில் நேரில் ஆஜராக வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://nitc.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment