உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Tuesday, June 18, 2019

கிராம வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் 17-ந் தேதி தொடங்குகிறது

கிராம வங்கிகளின் அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர் தேர்ந்தெடுப்பதற் கான எழுத்து தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 17, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 4.7.2019 ஆகும். பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம். மேலும் தேர்வு பற்றிய விவரங்களை www.ibps என்ற இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம்(ஜூலை) 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுப்பதற்கு, வெளியில் செல்வதற்கு அனுமதி கிடையாது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 17-7-2019 அன்று விடுதியில் நேரில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3 ஆயிரத்துக்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 10.07.2019-க்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment