Ad Code

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 129 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.04.2019.

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேனேஜர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 129 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.04.2019. இணைய முகவரி : www.syndicatebank.in
பிரபல வங்கிகளில் அதிகாரி பணிகள் 2 பிரபல வங்கிகளில் அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சிண்டிகேட் வங்கி பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான சீனியர் மேனேஜர், மேனேஜர், செக்யூரிட்டி அதிகாரி போன்ற பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 129 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி வாரியான விவரம்: சீனியர் மேனேஜர் (ரிஸ்க் மேனேஜ்மென்ட்) - 5, மேனேஜர் (ரிஸ்க் மேனேஜ்மென்ட்) - 50, மேனேஜர் (சட்டம்) - 41, மேனேஜர் (ஆடிட்) - 3, செக்யூரிட்டி அதிகாரி - 30 . இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... கல்வித்தகுதி பட்டப்படிப்பு படித்தவர்கள், சட்டம் படித்தவர்கள், எம்.பி.ஏ. (பேங்கிங், நிதி), எம்.எஸ்சி., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-2-2019-ந் தேதியில், 25 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஏப்ரல் 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.syndicatebank.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஐ.டி.பி.ஐ. வங்கி தொழில் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் சார்ட்டடு அக்கவுண்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. டெபுடி பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மேலாளர் போன்ற பதவிகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. சி.ஏ., ஐ.சி.டபுள்யூ. படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.idbi.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 8-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code