SBI RECRUITMENT 2019 |
SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019.
இணைய முகவரி : www.sbi.co.in
ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள்
ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்தியாவின் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. மற்ற பொதுத்துறை வங்கிகள், வங்கி பொது எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஸ்டேட் வங்கி மட்டும் தனியே தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்து வருகிறது. கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்
பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
நெட்பேங்கிக் மற்றும் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் மே 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதமும், முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10-ந்தேதியும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Home »
SBI JOB
» SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in
No comments:
Post a Comment